பெரம்பலூர், ஜூலை 11 -
தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு பெரம்பலூர் வட்டக் கிளையின் 8வது மாவட்ட மாநாடு செவ்வாயன்று பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலத்தில் நடைபெற்றது.
மாநாட்டிற்கு வட்டத் தலைவர் எ.எஸ்.சம்பத் தலைமை வகித்தார். வட்ட துணைத் தலைவர் எம். கருணாநிதி வரவேற்றார். சிஐடியு மாவட்டச் செய லாளர் எஸ்.அகஸ்டின் தொடக்க உரையாற்றினார். மாநிலப் பொருளாளர் அ.பழனி நிறைவுரை ஆற்றி னார்.
மின்வாரியம் உள்பட ஒன்றிய-மாநில பொதுத் துறைகளை தனியாருக்கு தாரைவார்க்கும் மக்கள் விரோத செயலை இந்த மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. தனியார்மய கொள்கையை திரும்ப பெற வேண்டும். பழைய பென்சன் திட்டத்தை அம லாக்க வேண்டும். மின்வாரியத்தின் பொன் விழா ஆண்டையொட்டி ஓய்வூதியர்களுக்கு 3 சதவீதம் ஆண்டு உயர்வு வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை களைந்திட வேண்டும். அரசு மற்றும் பொதுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
பெரம்பலூர்-அரியலூர் வருவாய் மாவட்டங்கள் தனித்தனியாக பிரிந்த பிறகும் மின்சார மாவட்டம் பிரிக்கவில்லை. எனவே அதனை தனியாக பிரித்து மக்கள் சேவைகளை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. வட்ட துணைத்தலைவர் ஜி.தனபால் நன்றி கூறி னார்.