சிபிஎம், வி.தொ.ச.ஆர்ப்பாட்டம் தஞ்சாவூர், அக்.31 - மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில், வேலை பார்த்தவர்களுக்கு மாதக்கணக் கில் வழங்கப்படாமல் உள்ள சம்பளத்தை அளிக் காத ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும், சம்பள பாக்கியை நிலுவையின்றி உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் செவ்வாயன்று மனுக் கொடுத்து காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. மதுக்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்திற்கு, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் வை.சிதம்பரம் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.கலைச் செல்வி போராட்டத்தை துவக்கி வைத்து உரை யாற்றினார். மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன் நிறைவுரையாற்றினார். மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.சி.பழனிவேலு, மூத்த தோழர் ஆர்.காசிநாதன், ஒன்றியக் குழு உறுப்பி னர்கள் மற்றும் கிளை செயலாளர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கோரிக்கைகளை வலியு றுத்தி மனு அளிக்கப்பட்டது. போராட்டத்தையடுத்து, வட்டார வளர்ச்சி அலு வலர் ராஜன் தலைமையிலான அதிகாரிகள் சமா தானப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், தீபா வளிக்கு முன்னதாக சம்பள பாக்கியை வழங்க நட வடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். நாச்சியார்கோவில் கட்சியின் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியம் சார்பில், மாத்தூரிலிருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் பேரணியாக புறப்பட்டு, நாச்சியார் கோவில் பேருந்து நிலையத்தில் சாலை மறியல் நடைபெற்றது. போராட்டத்திற்கு ஒன்றியக் குழு செயலாளர் எஸ்.பழனிவேல் தலைமை வகித்தார். போராட் டத்தை மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.ஜெய பால் துவக்கி வைத்தார்.
ஒன்றியக் குழு உறுப்பி னர்கள் பலர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட சுமார் 300-க்கும் மேற்பட்டோரை போலீ சார் கைது செய்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த திருவிடை மருதூர் வட்டார வளர்ச்சி துணை அலுவலர் வீர மணி, மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் சித்ரா, நாச்சியார்கோவில் காவல்துறை ஆய்வாளர் ரேகாராணி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி யதில், ‘தீபாவளிக்குள் நிலுவையில் உள்ள மூன்று மாத நூறுநாள் ஊதியத்தை தமிழக அரசிடம் பெற்று வழங்கப்படும்” என உறுதியளித்தனர். புதுக்கோட்டை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ.2100 கோடி நிதிப் பாக்கியை தீபாவளி பண்டிகை யைக் கணக்கில் கொண்டு உடனடியாக விடு விக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார்கோவிலில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குன்றாண்டார்கோவில் தபால் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் ஒன்றி யத் தலைவர் வி.பழனிச்சாமி தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் எஸ்.சங்கர் கண்டன உரை யாற்றினார். கோரிக்கைகளை விளக்கி மாநிலக்குழு உறுப்பினர் கே.சண்முகம், மாவட்ட துணைச் செய லாளர் எம்.சண்முகம், ஒன்றியச் செயலாளர் எஸ்.பெருமாள் ஆகியோர் பேசினர். போராட்டத்தை ஆதரித்து சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் கே.தங்கவேல், ஒன்றியச் செயலாளர் எஸ்.கலைச்செல்வன் மற்றும் எம்.லெட்சுமணன் ராமச் சந்திரன், மகமாயி உள்ளிட்டோர் பேசினர்.