மயிலாடுதுறை, ஜன.20- மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடை யூரை அடுத்துள்ள திருமெய்ஞானம் கிரா மத்தில் தியாகிகள் அஞ்சான்-நாகூரான் 40 ஆம் ஆண்டு நினைவு தின பொதுக் கூட்டம் புதனன்று திருமெய்ஞானம் நினைவி டம் அருகே ஒன்றிய செயலாளர் ஏ.ரவிச்சந்தி ரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முதற்கட்ட தவணையாக மயி லாடுதுறை மாவட்டம் முழுவதும் சேகரிக் கப்பட்ட 1 லட்சத்து 55 ஆயிரம் ரூபாயை மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன், மாநி லக்குழு உறுப்பினர் எம்.சின்னத்துரையிடம் வழங்கினார். அதேப்போன்று விவசாய சங்க வளர்ச்சி நிதியாக இந்திய தொழிற்சங்க மையம் சார்பில் 4 லட்சத்து 55 ஆயிரம் ரூபாயை மாநில செயலாளர் சி.ஜெயபால் வழங்க, விவசாய சங்க மாநிலத் தலைவர் வி.சுப்ரமணியன் பெற்றுக்கொண்டார். பொதுக்கூட்டத்தில் மாவட்டம் முழுவதிலிருந்தும் ஏராளமா னோர் கலந்து கொண்டனர். ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ்.பரமசிவம் நன்றி கூறினார்.