districts

பாபநாசம் லயன்ஸ் கிளப் விழா

பாபநாசம், ஜூலை 6-

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் லயன்ஸ் கிளப்பின் 41-ஆவது ஆண்டு புதிய  நிர்வாகிகள் பணியே ஏற்பு விழா பாப நாசத்தில் நடைபெற்றது. லயன்ஸ் கிளப் தலைவர் செங்குட்டுவன் தலைமை வகித்தார். இணைச் செயலாளர் கார்த்தி கேயன் ஆண்டறிக்கை வாசித்தார்.

    மாவட்ட இரண்டாம் துணை ஆளுநர்  மணிவண்ணன் பங்கேற்று புதிய நிர்வாகி களுக்குப் பணியேற்பு செய்துவைத்தார். தொடர்ந்து ஏழ்மை நிலையில் உள்ள வர்களுக்குத் தையல் இயந்திரம், அரிசி, பள்ளிக்கு கணினி-பிரிண்டர்- யு.பி.எஸ்,  நடைபாதை வியாபாரிகளுக்கு நிழற்குடை கள், பள்ளி-கல்லூரி மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை, என நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.  

   2023 -2024- ஆம் ஆண்டின் லயன்ஸ் சங்கத் தலைவராக ராஜா முகமது, செய லராக ஜெகதீசன், பொருளாளராக ஜோதி மற்றும் இயக்குநர்கள் பணியேற்றுக் கொண்டனர். நிர்வாக அலுவலர் பழனி யப்பன், மண்டலத் தலைவர் மீனா, வட்டாரத் தலைவர் விஜயா, ஒருங்கிணைப்பாளர்கள் கலைச்செல்வி, பசுபதி, சிவராமன், அண்ணாமலை, மாவட்டத் தலைவர்கள் செல்வராஜ், சம்பந்தம், ஆறுமுகம், சாப்ஜான், முத்தமிழ்ச்செல்வம், பாண்டி யன், பிரபாகரன், கணேசன், நவநீத கிருஷ்ணன், செயலாளர் ஜெகதீசன் ஆகி யோர் கலந்துகொண்டனர்.

;