புதுக்கோட்டை, ஜூலை 10-
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கொன் னையம்பட்டி கிராமத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களை வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ள வர்களாக ஊராட்சி மன்றத் தலை வர் கணக்குக் காட்டியதாக புகார் தெரிவித்துள்ளனர்.
கொன்னையம்பட்டி கிரா மத்தைச் சேர்ந்த 150-க்கும் மேற் பட்டோர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை அளித் துள்ள புகார் மனுவில், புதுக் கோட்டை மாவட்டம் பொன்னமரா வதி அருகே கொன்னையம்பட்டி கிரா மத்தில் 600-க்கும் மேற்பட்ட குடும் பங்கள் வசித்து வருகிறோம். எங் கள் கிராமத்தில் 400-க்கும் மேற் பட்டோர் ஏழை விவசாய குடும்பங்க ளைச் சேர்ந்தவர்கள். இவர்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பட்டி யலில் இருந்தனர். ஆனால் தற்போது தவறான கணக்கீட்டை ஊராட்சி மன்றத் தலைவர் மேற்கொண்டுள் ளார்.
அந்த 400 பேரில் 300 பேரை நீக்கிவிட்டு ஊராட்சி மன்ற தலைவர் உட்பட அவர்களது உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என வசதி படைத்த பலரையும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளதாக தவறான கணக்கீடு பதிவு செய்துள்ளனர். அதி லும், அவரது உறவினர் ஒருவர் அரசு ஊழியராக உள்ள சூழலில், அவ ரையும் வறுமை கோட்டிற்குகீழ் உள்ள பட்டியலில் சேர்த்துள்ளார்.
இதனால் உண்மையிலேயே வறுமையில் வாடும் குடும்பங்க ளைச் சேர்ந்த எங்கள் கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தாங்கள் வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவர்கள் என தற்போது கணக் கீடு எடுக்கப்பட்டுள்ளதால், தங்க ளுக்கு அரசின் சலுகைகள் கிடைக்கா மல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை மேற்கொண்டு மீண்டும் வறுமைக்கோட்டு பட்டி யலை கணக்கீடு செய்து தகுதி வாய்ந்த பயனாளிகளை சேர்க்க வேண்டும். அதேபோல் தகுதி இல் லாத பயனாளிகளை நீக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.