முசிறி, செப்.7 - சமீபத்தில் கொல்லிமலையில் பெய்த கன மழை காரணமாக, திருச்சி மாவட்டம் உப்பிலிய புரம், ரெட்டியாபட்டி ஏரிகள் நிரம்பின. இதன் உபரி நீரால் தா.பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கரிகாலியில் 38 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஏரி புதன்கிழமை நிரம்பியது. ஏரி நிரம்பி வழிவதை கண்டு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் இந்த ஏரி நீர் வடமலைப்பட்டி ஏரிக்கு செல்லும். இதனால், சுற்றுப்புற பகுதி விவசாய ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இந்த கரிகாலி ஏரியையும், நீர் வரும் வழியில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள் ளதா எனவும், தா.பேட்டை ஒன்றிய ஆணை யர்கள் மனோகரன் மற்றும் குணசேகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கரிகாலி ஏரி இந்த ஆண்டு மூன்றாவது முறையாக நிரம்பிய தால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.