districts

img

கொள்ளிடம் ஆற்றில் 2000 கனஅடி தண்ணீர் திறப்பு: நீரில் மூழ்கிய சலவைத் தொழிலாளர்களின் குடிசைகள்

திருச்சிராப்பள்ளி, மே 29- முக்கொம்பு காவிரி கதவணைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், சுமார் 2000 கன அடி நீர் கொள்ளிடம் ஆற்றில் திருப்பி விடப்பட்டது. இதனால் சலவைத் தொழிலாளர்கள் போட்டிருந்த குடிசைகள் நீரில் மூழ்கியுள்ளன.

திருச்சி முக்கொம்பு மேலணையில் காவிரி ஆற்றின் கதவணையில் மராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், மேட்டூரில் இருந்து வரும் சுமார் 2000 கனஅடி நீர் தற்போது கொள்ளிடம் ஆற்றில் திருப்பி விடப்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றில் விநாடிக்கு 2000 கன அடி நீர் திறக்கப்படுவதால் சலவைத் தொழிலாளர்கள், கால்நடை கள் கவனமுடன் இருக்க வேண்டுமென திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

திருச்சி திருவானைக்காவல், செக்போஸ்ட் பகுதியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட சலவைத் தொழிலாளர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். அவர்கள் அனைவருமே கொள்ளிடம் ஆற்றில்தான் சலவைத் தொழி லை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சூழலில் சலவைத் தொழிலாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக, மேடான பகுதி யில் சலவைத் தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கொள்ளிடம் ஆற்றில் விநாடிக்கு 2000 கன அடி நீர் திறக்கப்பட்டதால், சலவைத் தொழிலாளர்கள் ஆற்றின் நடுவே அமைத்திருந்த குடிசைகள் அனைத்தும் நீரில்மூழ்கின.

;