districts

மயிலாடுதுறை காரைக்குடி வழித்தடத்தில் சென்னைக்கு இரவு நேர ரயில் இயக்க கோரிக்கை

தஞ்சாவூர், ஜூலை 3-  

    மயிலாடுதுறை - திருவாரூர் - பட்டுக்கோட்டை - காரைக்குடி ரயில் பாதையில், சென்னைக்கு தினசரி இரவு நேர ரயில்களை இயக்க வேண்டும் என பட்டுக் கோட்டை வட்ட ரயில் பயணிகள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.  

    மயிலாடுதுறை - திருவாரூர் - பட்டுக்கோட்டை - காரைக்குடி ரயில் பாதையில், தற்சமயம் தாம்  பரம் - செங்கோட்டை அதி விரைவு ரயில் (வண்டி எண்: 20683 /20684) வாரம் மூன்று முறை யும், செகந்திராபாத் - ராமநாத புரம் வாராந்திர சிறப்பு விரைவு  ரயில் (07695 /07696), எர்ணாகுளம்  - வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு விரைவு ரயில் (06035/ 06036), திருவாரூர் - காரைக்குடி சிறப்பு விரைவு ரயில் (06197/ 06198) திங்கட்கிழமை முதல் சனிக்  கிழமை வரையும் என நான்கு ரயில்கள் இயங்கி வருகின்றன.

    மேலும், இந்த தடத்தில் சென்னை மற்றும் மதுரைக்கான தினசரி ரயில்களை இயக்க வேண் டும் என பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் தலைவர் நா.ஜெயராமன் மற்றும் செயலாளர் வ.விவேகானந்தம் ஆகியோர் புதுதில்லி ரயில்வே  வாரியத் தலைவர், சென்னை  தெற்கு ரயில்வே பொது மேலா ளர், திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.

    அம்மனுவில், “மயிலாடுதுறை  - திருவாரூர் - பட்டுக்கோட்டை - காரைக்குடி ரயில் பாதையில், முன்பு மீட்டர் கேஜ் காலத்தில் சென்னையில் இருந்து இயங்கி  வந்த கம்பன் விரைவு ரயிலை  மீண்டும் இத்தடத்தில் இயக்க  வேண்டும். இவற்றை சென்னை யில் இருந்து காரைக்குடி அல் லது இராமேஸ்வரம் வரை தினசரி  இரவு நேரத்தில் இரு முனைகளில்  இருந்தும் இயக்க வேண்டும் என்  பது இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாகும்.

    ரயில்வே நிர்வாகத்தால் இயக்க திட்டமிடப்பட்டுள்ள சென்னை - திருச்சி சோழன் பகல்  நேர அதிவிரைவு ரயிலுக்கு (22675  /22676) இணைப்பு ரயிலை, காரைக்குடியில் இருந்து மயிலாடு துறை வரை இயக்க வேண்டும்.

     மயிலாடுதுறையில் இருந்து திரு வாரூர், பட்டுக்கோட்டை, காரைக் குடி, மானாமதுரை வழியாக தமிழ்  நாட்டின் மூன்றாவது பெரிய நகர மான மதுரைக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும். இந்த ரயில், 12 சட்டமன்ற  தொகுதிகள், 5 நாடாளுமன்ற தொகுதிகளில் வசித்து வரும் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்  கும்.

    ஆன்மீகம், மருத்துவம், கல்வி, வர்த்தகம், சுற்றுலா, நீதி மன்றம் செல்வோருக்கும் இந்த மயிலாடுதுறை-மதுரை ரயில் பயனுள்ளதாக இருக்கும். ரயில்வே நிர்வாகம் வாரம்  இருமுறை இயக்க திட்டமிட் டுள்ள எர்ணாகுளம் - வேளாங் கண்ணி வாராந்திர சிறப்பு விரைவு  ரயிலை, நிரந்தரமாக வாரம் இரு முறை சாதாரண கட்டணத்தில் இயக்க வேண்டும்.

   செகந்திராபாத்  - இராமேஸ்வரம் சிறப்பு கட்டண  வாராந்திர விரைவு ரயிலை சாதா ரண கட்டணத்தில் நிரந்தரமாக இயக்க வேண்டும். எரிபொருளை சேமிக்கவும், பயண நேரத்தைக் குறைக்கவும், சுற்றுச்சூழலை மாசுபடாமல் காக்கவும் திருவாரூர்-காரைக் குடி, திருத்துறைப்பூண்டி -  அகஸ்தியம்பள்ளி ரயில் தடங் களை மின் மயமாக்கவேண்டும்” என கூறப்பட்டுள்ளது.