districts

செவிலியரை ஏமாற்றிய மருத்துவர் மீது பெண் வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப் பதிய வேண்டும்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 11 -

      அனைத்திந்திய ஜனநாயக மாதர்  சங்க திருச்சி மாநகர் மாவட்டச் செயலா ளர் சரஸ்வதி வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:

     திருச்சி மாவட்டம் நெய்வேலியை சேர்ந்த செவிலியர் (30) ஒருவர் திருச்சி யில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் பணிபுரிந்து வந்தார். அதே மருத்துவமனையில் மலைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த மருத்துவர் ஆதில் ஹேக் (30) என்பவரும் பணிபுரிந்து வந்தார். இவர்கள் இருவரும் கடந்த 3 வருடங்களாக காதலித்து ரகசிய திருமணம் செய்து கொண்டனர்.

    இந்நிலையில் அந்த பெண்ணிடம் ஆசைவார்த்தை கூறி அவரது ஆசைக்கு இணங்க வைத்துள்ளார் மருத்துவர் ஆதில்ஷேக். இவர் தற்போது  இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில்  உள்ள ஆரம்ப சுகாதார மருத்துவமனை யில் மருத்துவராக பணிபுரிந்து வரு கிறார். விடுமுறை நாட்களில் அந்தப் பெண், அவர் தங்கியுள்ள இடத்திற்கு சென்று இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இதனால் அந்தப் பெண் கர்ப்பமடைந்தார்.

    மருத்துவர் ஆதில்ஷேக்கின் தங் கைக்கு திருமணம் நடக்க இருப்பதால், மாத்திரை வாங்கி கொடுத்து அந்த பெண்ணின் கருவை அவர் கலைத் துள்ளார். இதற்கிடையில் மற்றொரு பெண்ணின் செல்போனில் இருந்து மருத்துவருக்கு நெருக்கமான தக வல்கள் வந்துள்ளன.

    இதுகுறித்து அந்த பெண் ஆதில் ஷேக்கிடம் கேட்டதற்கு, அவரும் மருத்து வர். தொழில்ரீதியாக பேசியுள்ளதாக கூறியுள்ளார். பின்னர் பாதிக்கப்பட்ட செவிலியர், அந்தப் பெண் மருத்து வரின் செல்போனிற்கு தொடர்பு கொண்டு, “ஏன் இதுமாதிரியான தகவல்களை எனது கணவருக்கு அனுப்புகிறீர்கள் என கேட்டதற்கு, எனக்கும் அவருக்கும் நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது. நாங்கள் திருமணம் செய்து கொள்ள போகிறோம். எனவே நீ அவரை  விட்டு விலகிவிடு” எனக் கூறியுள்ளார்.

     இதனை ஏற்றுக்கொள்ள முடியாத செவிலியர், ஆதில்ஷேக்கிடம் இது குறித்து கேட்டதற்கு நிச்சயதார்த்தம் நடந்தது உண்மைதான். நாம் இரு வரும் அந்த பெண்ணை நேராக சந்  தித்து நடந்தவற்றை கூறி திருமணத்தை நிறுத்திவிடலாம் என கூறியுள்ளார்.  

    இந்நிலையில் திருச்சி மலைக் கோட்டை அனைத்து மகளிர் காவல்  நிலையத்தில் செவிலியர் புகார் அளித் துள்ளார். போலீசார் இருவரையும் அழைத்து விசாரணை நடத்தி, சேர்ந்து வாழும்படி அறிவுரைக் கூறி அனுப்பி உள்ளனர். இருவரும் அதன்படி சேர்ந்து வாழ முடிவெடுத்துள்ளனர்.  

     இந்நிலையில் ஆதில்ஷேக் எனது தங்கை திருமணம் முடியும் வரை நீ உனது தாயார் வீட்டில் இரு எனக்கூறி செவிலியரை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றுள்ளார். அதன்பின் ஆதில் ஷேக்கை தொடர்பு கொள்ள செவிலியர்  முயற்சித்த போது, அவரது போனை ஆதில்ஷேக்கின் குடும்பத்தார் எடுத்துள்  ளனர்.  இதற்கிடையில் ஆதில்ஷேக்கின் தாயார் தனது மகனை காணவில்லை என மலைக்கோட்டை காவல்நிலைய சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவில் புகார் அளித்துள்ளார்.

    அதில் செவிலியர் மீது தான் சந்தேகம் என பொய்யான புகாரை அளித்துள்ளார். இதன் அடிப்படை யில் போலீசார் செவிலியரை அழைத்து விசாரித்துள்ளனர். ஆனால் இதுவரை ஆதில்ஷேக் எங்கு உள்ளார் என தெரிய வில்லை என காவல்துறையினர் கூறி வருகின்றனர்.  

    இதுகுறித்து அந்த பெண் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்  தொடர்பு கொண்டபோது அவரை கண்டு பிடித்த பின் இந்த வழக்கை விசாரிக்க லாம் என கூறியுள்ளனர். இதையடுத்து மாவட்ட காவல் ஆணையர் அலுவல கத்தில் அந்த பெண் மீண்டும் புகார் அளித்துள்ளார். அதற்கு அவர்கள் விரைவாக விசாரணை செய்கிறோம் என கூறியுள்ளனர்.

    எனவே மருத்துவர் ஆதில்ஷேக்-ஐ உடனடியாக கண்டுபிடித்து அவர் மீது பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கில் முறையாக விசாரணை நடத்தி வழக்குப் பதியாத மலைக்கோட்டை காவல் நிலைய காவலர்களை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்டக் குழு வன்மையாக கண்டிக்கிறது.

    மேலும் இந்த விவகாரத்தில் செவி லியருக்கு ஏற்பட்டுள்ள வன்முறைக்கு காவல்துறை தீர்வு காணவில்லை என்றால். மாதர் சங்கம் சார்பில் தொடர் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட் டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரி வித்துள்ளார்.