districts

img

தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் எண்ணெய் பணை நடவு விழா

பாபநாசம், டிச. 2- பாபநாசத்தை அடுத்துள்ள  அம்மா பேட்டை அடுத்த உக்கடை கிராமத்தில் எண்ணெய் பனை புதிய நடவுக்கான கன்றுகள் வழங்கப்பட்டன.  கன்றுகளை வழங்கிய தேசிய உண வுப் பாதுகாப்பு இயக்க ஆலோசகர் இளஞ்செழியன்  கூறுகையில், தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கம் 2021 -22 இன் கீழ் புதிய எண்ணெய் பனை நட விற்கு ஊடுபயிர் சாகுபடி, பராமரிப்பு  ஆகி யவற்றிற்கு மானிய உதவி வழங்கப் படுகிறது. தற்போது நிலவிரும் ஆள் பற்றாக்குறை, காலநிலை மாறுபாடுகள் ஆகியவற்றை கருத்தில்கொண்டு விவசாயிகள் எண்ணெய்பனை புதிய நடவு மேற்கொள்ள முன்வரவேண்டும்.  எண்ணெய் பனை சாகுபடி செய்தால் மூன்றாண்டுகளுக்குப் பிறகு விவசாயி க்கு மாத வருமானம் கிடைக்கத் துவங்கும். கடந்த மூன்றாண்டுகளில் எண்ணெய் பனை பழக் குலைகளின் கொள்முதல் விலை கிலோ ரூ.10- க்கு குறையாமல் நிலையாக உள்ளது. மேலும் கொள் முதல் செய்யப்படும் பழக்குலைகளின் அளவைப் பொறுத்து ஊக்கத் தொகை யும் வழங்கப்படும் என்றார். நிகழ்வில் அம்மாபேட்டை வேளாண்மை உதவி இயக்குநர் சுஜாதா, வேளாண் அலுவலர் மனோகரன், வேளாண் உதவி அலுவலர் சூரியமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

;