districts

img

ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்குக!

திருச்சிராப்பள்ளி, டிச.18 - ஓஎச்டி ஆபரேட்டர்கள் மற்றும் தூய்மை  காவலர்களை முறையாக பணி நியமனம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 7-வது ஊதிய குழு பரிந்துரை அடிப் படையில் 1.10.2017 முதல் ஊதியம் வழங்க அரசு உத்தரவிட்டும் அமல்படுத்தாத நிர்வா கத்தை கண்டிப்பதோடு, உடனடியாக ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். பணியில் உள்ள அனைத்து ஊழி யர்களுக்கும் உடனடியாக பணி பதிவேடு பதியப்பட்டு நடைமுறைப்படுத்த வேண்டும்.  முன்கள பணியாளர்களுக்கு அரசு அறிவித்த  ரூ.15,000 ஊக்கத்தொகை அனைத்து ஊழி யர்களுக்கும் வழங்க வேண்டும். ஓஎச்டி ஆபரேட்டர்களுக்கு கடந்த அதிமுக அரசு அறி வித்த ரூ.1400 ஊதிய உயர்வுக்கான அரசா ணையை திருத்தம் செய்து உடனே அமல்ப டுத்த வேண்டும். இதுவரை ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்காத ஊராட்சியில் உடனடி யாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊராட்சி ஓஎச்டி ஆபரேட்டர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் மணப்பாறை ஒன்றியம் ம.கல்லுப்பட்டி ஊராட்சி  ஒன்றிய அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.  சங்க ஒன்றிய தலைவர் ராமசாமி தலைமை  வகித்தார். போராட்டத்தை விளக்கி சங்க மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம், ஒன்றிய  செயலாளர் புஷ்பராஜ், கட்டுமான சங்க மாவட்ட தலைவர் தியாகராஜன், சிஐடியு மாவட்ட குழு உறுப்பினர் அழகர்சாமி ஆகி யோர் பேசினர். பின்னர் பி.டி.ஓ.வுடன் தொழிற் சங்கம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் காத்திருப்பு போராட் டம் கைவிடப்பட்டது.

;