புதுக்கோட்டை, ஜூன் 24 -
தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதுகுறித்து புதுக் கோட்டை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தெரிவித்துள்ளதாவது:
2022-23 ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான கல்லூரி மாணாக் கர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் புதுக்கோட்டை, கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 4.7.2023 (செவ்வாய்க்கிழமை) அன்றும் 11, 12 ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணாக்கர்களுக்கு புதுக்கோட்டை, முதன்மைக் கல்வி அலுவலக தேர்வுக் கூடத்தில் 6.7.2023 (வியாழக்கிழமை) அன்றும் நடைபெற உள்ளன. ஒவ்வொரு போட்டிக்கும் பள்ளி, கல்லூரிகளிலிருந்து ஒரு மாணாக்கர் வீதம், 3 போட்டிகளுக்கு 3 மாணாக்கர்கள் அனுப்பப் பெற வேண்டும். போட்டி நடைபெறும் நாளன்று காலை 9.30 மணிக்குள் வருகை தர வேண்டும்.
போட்டிகள் ஒவ்வொன்றுக்கும் முறையே முதற்பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ.7,000, மூன்றாம் பரிசு ரூ.5,000 என வழங்கப்படும். போட்டிகளில் பங்கேற்கும் மாணாக்கர்களின் விவரங்கள் பள்ளி, கல்லூரி மூலமாக 30.6.2023-க்குள் புதுக்கோட்டை மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு (pdkttamilthai@gmail.com) அனுப்பப்பட வேண்டும்.