districts

img

புதிய பென்சன் திட்டம் ரத்து கோரி ஓய்வூதியர்கள் காத்திருப்புப் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, ஏப்.22-

   புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய  வேண்டும், 8-ஆவது ஊதியக் குழுவை உடனே நிறுவ வேண்டும், 1.1.2017 முதல்   பிஎஸ்என்எல் / எம்டிஎன்எல் ஓய்வூதியர் களுக்கு ஓய்வூதியத்தை மாற்றி அமைக்க  வேண்டும். வங்கித்துறை ஓய்வூதியர்கள் அனைவருக்கும் சீரமைக்கப்பட்ட ஓய்வூ தியம் வழக்க வேண்டும். நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரை செய்துள்ள அனைத்து அம்சங் களையும் உடனே அமல்படுத்த வேண்டும்  என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கை களை வலியுறுத்தி ஓய்வூதியர் சங்கங்க ளின் தேசிய ஒருங்கிணைப்பு குழு சார்பில்  திருச்சி ஒத்தக்கடை பகுதியில் உள்ள  பிஎஸ்என்எல் பொதுமேலாளர் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை காத்தி ருப்புப் போராட்டம் நடைபெற்றது.

   போராட்டத்திற்கு டிஆர்பியூ செயலாளர்  மனோகரன், போஸ்டல் ஓய்வூதியர் சங்க  ரெங்கராஜன் ஆகியோர் தலைமை வகித்த னர். ஏஐபிஆர்பிஏ மாவட்டச் செயலாளர் சிவ சுப்பிரமணியன், ஐடிபிஏ மண்டலச் செய லாளர் தங்க சுப்பிரமணியன், ஏஐபிடிபிஏ மாவட்டச் செயலாளர் சின்னையன் ஆகி யோர் பேசினர். என்சிசிபிஏ கன்வீனர் செல்வன் நன்றி கூறினார்.