திருச்சிராப்பள்ளி, செப்.3 - சிலம்பம் உலக சம்மேளனம் சார்பில் தேசிய அளவிலான சிலம்பம் போட்டி ஞாயி றன்று திருச்சியில் நடந்தது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிலம்ப போட்டியை துவக்கி வைத்தார். இதில் தமிழ் நாடு, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி, அசாம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலம்பம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். ஒற்றைக்கம்பு வீச்சு, இரட்டை கம்பு வீச்சு, வாள்வீச்சு, சிலம்பம் சண்டை, அலங்கார வரிசை, மான்கொம்பு, வேல்கம்பு போன்ற பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடை பெற்றன. போட்டியில் வெற்றி பெற்றவர் களுக்கு சிலம்பம் உலக சம்மேளனத்தினால் பதிவு செய்யப்பட்ட சான்றிதழ் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. இந்தப் போட்டிகளில் முதலிடம் பெற்ற சிலம்ப வீராங்கனைகள், 2023 டிசம்பர் மாதம் நடைபெற உள்ள தெற்காசிய மற்றும் ஆசிய சிலம்பப் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.