districts

img

சிபிஎம் வேலூர் மாவட்ட செயலாளராக எஸ்.தயாநிதி தேர்வு

வேலூர், டிச.14- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலூர் மாவட்டச் செயலாளராக எஸ். தயாநிதி யும், ராணிப்பேட்டை மாவட்ட அமைப்புக்குழு கன்வீனராக என்.காசிநாதனும் தேர்வு செய்யப்பட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலூர் மாவட்ட 23- வது மாநாடு டிசம்பர் 11,12 தேதிகளில் காட்பாடியில் நடைபெற்றது. பிரதிநிதிகள்  மாநாட்டிற்கு ப.சக்திவேல், பி.காத்தவராயன், எஸ்.டி. சங்கரி ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஏ. நாராய ணன் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். வர வேற்புக் குழுத் தலைவர் கே. ஜெ.சீனிவாசன் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் எஸ். தயாநிதி ஸ்தாபன வேலை அறிக்கையையும்,  நிதிநிலை அறிக்கையை மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.காசிநாதனும் சமர்ப் பித்தனர். கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி. சம்பத் துவக்கி வைத்து உரையாற்றி னார். மாநில செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங் வாழ்த்திப்பேசினார். மாநாட்டை நிறைவு செய்து மாநிலக்குழு உறுப்பினர் ப. சுந்தரராசன் உரையாற்றி னார்.

புதிய குழுக்கள் தேர்வு ஒன்றுபட்ட வேலூர் மாவட்டக் குழு வேலூர்- திருப்பத்தூர், ராணிப் பேட்டை என்று இரண்டாக பிரிக்கப்பட்டது. இதில் 31 பேர் கொண்ட வேலூர் -திருப்பத்தூர் மாவட்டக்குழு வில் எஸ். தயாநிதி, ஏ.நாரா யணன், எம்.பி.ராமச்சந்தி ரன், எஸ்.டி.சங்கரி, ப.சக்தி வேல், கே.சாமிநாதன், பி. காத்தவராயன், செ.ஏகலை வன், எம்.இந்துமதி, கே.ஜெ. சீனிவாசன் ஆகியோர் செயற்குழு உறுப்பினர களாகவும் எஸ். தயாநிதி மாவட்டச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  13 உறுப்பினர்களை கொண்ட ராணிப்பேட்டை மாவட்ட அமைப்புக்குழுவின் கன்வீனராக என்.காசிநாதன் தேர்வு செய்யப்பட்டார். தீர்மானங்கள் வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் குண்டும் குழியுமாக, சேறும் சகதியுமாக உள்ள சாலை களை உடனடியாக சீர மைக்க வேண்டும். 20 ஆண்டு களுக்கும் மேலாக விசா ரணைக் கைதிகளாக சிறை யில் அடைக்கப்பட்டுள்ள

 இஸ்லாமியர்களை நல் லெண்ண அடிப்படையில் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும். பாலாற்று தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுத்து நிறுத்த தடுப்பணை கள் கட்ட வேண்டும். திருப் பத்தூர் அரசு மருத்துவமனை யை அனைத்து வசதிகளும் கொண்ட மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை யாகவும் தரம் உயர்த்த வேண்டும். திருப்பத்தூர் மற்றும் ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் கரும்பு அர வையை துவக்க வேண்டும். குடியாத்தத்தை ஒட்டி யுள்ள தமிழ்நாடு - ஆந்திர எல்லையில் வனவிலங்கு களால் ஏற்படும் பாதிப்பு களை தடுக்க மின்வேலி அமைக்க வேண்டும், மோர் தானா அணையை பொழுது போக்கு சுற்றுலா மைய மாக்க வேண்டும். ராணிப்பேட்டை மாவட் டம் பிரிக்கப்பட்ட பிறகும் பல துறைகள் வேலூர் மாவட் டத்திலேயே செயல்படு கின்றன. அவற்றை முழுமை யாக பிரித்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் செயல்பட நடவடிக்கைகள் மேற் கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட் டன.

;