மயிலாடுதுறை ஜன-21- புரட்சியாளர்-மாமேதை லெனின் நூற்றாண்டு நினைவுதினத்தை முன்னிட்டு ஜனவரி 21 ஞாயிறன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் அவரது உருவப்படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத் தப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடை யூரில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு சார்பில் மாமேதை லெனின் நினைவு தின மாவட்ட பேரவை மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் சிறப்புரையாற்றினார். இதில் மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு , ஒன்றியக்குழு உறுப்பினர்கள்,கிளை செயலாளர்கள்,கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர். பேரவைக்கு முன்னதாக மாமேதை லெனின் உருவப்படத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் மற்றும் மாவட்ட தலைவர்கள் மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர். நாகப்பட்டினம் நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் உள்ள சிபிஎம் ஒன்றிய குழு அலுவலகங் கள், கட்சி கிளை அலுவலகங்களில் லெனின் நூற்றாண்டு நினைவு தினம் கடைப்பிடிக் கப்பட்டது. கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட செயலா ளர் வி. மாரிமுத்து மற்றும் பலர் பங்கேற்ற னர். பாப்பாகோவில் நாகை தெற்கு ஒன்றியம் சார்பில் பாப்பா கோவில் ஊராட்சியில் லெனின் நூற்றாண்டு நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் வி.மாரிமுத்து செங் கொடியை ஏற்றி வைத்து வீரவணக்கம் செலுத்தினார்.மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.முருகையன், நாகை தெற்கு ஒன்றிய செயலாளர் ஏ. வடிவேல், மாவட்டக் குழு உறுப்பினர் கே. செந்தில்குமார்,வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் டி.அருள்தாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.