மயிலாடுதுறை, ஜூன் 22-
மயிலாடுதுறை மாவட்ட திமுக சார்பில் கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு பொற் கிழி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மயிலாடுதுறையில் புதனன்று நடைபெற்றது.
கட்சியின் மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏவுமான நிவேதா எம்.முருகன் தலைமை வகித்தார். சுற்றுச் சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டா லின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொற்கிழி மற்றும் நலத்திட்ட உத விகளை வழங்கி உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், ‘‘தமி ழக முதல்வரின் முயற்சியால் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றினைவதை தடுக்கும் நோக்கிலேயே ஒன்றிய பாஜக அரசு எதிர்க்கட்சியினர் மீது அமலாக்கத் துறை சோதனை போன்ற நடவடிக்கை களை ஏவி விடுகிறது.
பல்வேறு சோதனைகளையும், போராட் டங்களையும் சந்தித்து கடந்து வந்துள்ள இயக்கமான திமுக இதற்கெல்லாம அஞ் சப்போவதில்லை. கொடுத்த வேலைகளை விட்டுவிட்டு கொடுக்காத வேலைகளை தமி ழக ஆளுநர் செய்து வருகிறார். சனாதன கொள்கைகளை பற்றி பேசி வருகிறார்.
மணிப்பூர் மாநிலத்தில் ஒரு மாத கால மாக போராட்டங்கள் நடைபெற்று வரு கிறது. ஆனால் பிரதமர் மோடி அவர்களு டன் பேச்சுவார்த்தை நடத்தாமல் அமெ ரிக்கா சென்றுவிட்டார். அவர் வெளிநாடு களுக்கு விமானி இல்லாமல் கூட செல்வார். ஆனால், அதானி இல்லாமல் செல்ல மாட் டார். அரசு நிறுவனங்களை அனைத்தை யும் அதானிக்கு கொடுத்து வருகிறார். அதானி விமானம், அதானி விமானநிலை யம், அதானி ரயில் என எல்லாமே அதானி யுடையதாகிவிட்டது’’ என பேசினார்.