திண்ணைப் பிரச்சாரம் வீடு வீடாகச் சென்று மக்களை சந்தித்த அமைச்சர் ஐ.பெரியசாமி திண்டுக்கல், மார்ச் 2- திண்டுக்கல் மாநகர் பகுதிகளில் ‘‘இல்லம்தோறும் ஸ்டாலினின் குரல்’’ எனும் தலைப்பில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டு வீடு வீடாகச் சென்று துண்டு பிரசுரங்களையும் கொடுத்து திண்ணைப் பிரச்சாரத்திலும் ஈடுபட்டார். திண்டுக்கல் மாநகரில் உள்ள நகர் வடக்கு பகுதி யான 10-ஆவது வார்டு செல்லாண்டியம்மன் கோவில் 1, 2, 3-ஆவது தெரு, வடக்கு தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஒவ்வொரு வீடுகளுக்கும் கடைகளுக்கும் சென்று ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி துண்டு பிரசு ரங்களை கொடுத்து மக்களிடம் குறைகளையும் கோரிக் கைகளையும் கேட்டு வந்தார். அதுபோல் 3-ஆவது தெருவில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த செல்லாண்டியம்மன் கோவிலுக்கு அமைச்சர் ஐ. பெரியசாமி ரூ.2 லட்சம் தனது சொந்த பணத்தை கொடுத் தார். இதைத் தொடர்ந்து பொது மக்களிடம் வசூல் செய்து கோவில் கட்டியதின் பேரில் கடந்த மாதம் கும்பாபி ஷேகம் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பொதுமக்களை சந்திக்க வந்த அமைச்சர் ஐ.பெரியசாமி செல்லாண்டி யம்மன் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது அப்பகுதி மக்கள் அமைச்சரை வரவேற்று மாலை, சால்வை அணிவித்தனர். இதைத் தொடர்ந்து அப்பகுதியில் ஒரு வீட்டின் திண் ணையில் உட்கார்ந்து அப்பகுதியில் உள்ள மக்களிடம் குறைகளையும் கோரிக்கைகளையும் கேட்டு அவர்கள் கொடுத்த மனுக்களையும் வாங்கிக் கொண்டு அதை நிறை வேற்றிக் கொடுக்கிறேன் என்று கூறினார். அதோடு தாங்கள் கூறிய அடிப்படை வசதிகளை உட னடியாக நிறைவேற்றித் தருவதாகக் கூறி, உடன் வந்த மேயர் இளமதி பிரகாஷிடமும், துணை மேயர் ராஜப்பா விடமும் உத்தரவிட்டார். அதோடு அரசின் நலத்திட்ட உதவிகளான உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.ஆயிரம் வழங்கும் புதுமைப்பெண் திட்டம் மற்றும் 28 லட்சம் மாணவர் களுக்கு திறன் பயிற்சி வழங்கும் ‘நான் முதல்வன் திட்டம்’ போன்ற பல்வேறு திட்டங்களைப் பற்றி பொதுமக்களிடம் அமைச்சர் ஐ.பெரியசாமி விளக்கினார். இதில் மாநகராட்சி மேயர் இளமதி பிரகாஷ், துணை மேயர் ராஜப்பா, பொதுமக்கள் பெரும் திரளாகக் கலந்து கொண்டனர்.