districts

திருச்சி முக்கிய செய்திகள்

ரேஷன் கடை  கட்டுமானப் பணி தொடக்கம்

பாபநாசம், செப்.25- தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள் ஓலைப்  பாடியில் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹி ருல்லாவின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 12.50  லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டது. நிகழ்வில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் தாமரைச் செல்வன், ஓலைப்பாடி ஊராட்சி மன்றத் தலைவர் விஜய் பிரசாத், பாபநாசம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சுமதி, பாபநாசம் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், பணி  மேற்பார்வையாளர் செல்வராணி ஆகியோர் பங்கேற்ற னர்.

பேராவூரணி அரசு மருத்துவமனையை  ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர் 

தஞ்சாவூர், செப்.25-  தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு மருத்துவ மனையில், சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் ஆய்வு செய்தார். பேராவூரணியில் பெருந்தலைவர் காமராஜர் அரசு மருத்துவமனை உள்ளது. இம்மருத்துவமனையில், பேராவூரணி மற்றும் சுற்றுவட்டாரக்ராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றுச்செல்கின்றனர். பலர் உள்நோயாளிகளாகத் தங்கி  சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்தநிலையில், அரசு மருத்துவமனையில் உள்ள அடிப்படை வசதிகள், கட்டமைப்புகள் குறித்து, பேரா வூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் திங்கள்  கிழமை ஆய்வு செய்தார். நோயாளிகளிடம் நலம் விசா ரித்ததோடு, உரிய மருத்துவ சிகிச்சைகள், மருந்து-மாத்தி ரைகள் அளிக்கப்படுகிறதா எனக் கேட்டறிந்தார். அப்போது அரசு தலைமை மருத்துவர் காமேஸ்வரி தேவி,  மருத்துவர் பாலமுருகன் ஆகியோர் உடனிருந்தனர். ஆஞ்சியோ பரிந்துரைக்கப்படும், இதய நோயாளி களுக்கு, ரூ.5 ஆயிரம் மதிப்பிலான தடுப்பூசி செலுத்தப்  பட்டு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல்சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பி வைக்கும் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது என்று மருத்து வர்கள் சட்டமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தனர்.  டெங்கு ஜுரம் பாதித்து யாரும் வந்துள்ளனரா எனவும்,  காய்ச்சல் நோயாளிகள் வந்தால் அவர்களுக்கு தேவை யான முன்னேற்பாடு வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என வும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார் சட்டமன்ற உறுப்பி னர் அசோக்குமார்.

கரூரில் 2 நாட்கள் மதுபான கடைகளுக்கு விடுமுறை

கரூர், செப்.25- செப்.28-ஆம் தேதி மிலாடி நபி. அக்டோபர் 2-ஆம் தேதி  காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இந்த இரு நாட்களும் கரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் எப்எல்-3 உரிமம் பெற்ற ஹோட்டல்கள் உலர்தினமாக அனுசரிக்க வேண்டும். அன்றைய தினங்களில் கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபான சில்லறை  விற்பனைக் கடைகள், உரிமக் கூடங்கள் மூடப்பட  வேண்டும் என ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்துள் ளார்.

திருக்கடையூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இசிஜி கருவி வழங்கல்

மயிலாடுதுறை, செப்.25- மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பொதுமக்களின் நலன்கருதி புதிய இசிஜி கருவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  திருக்கடையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு திருக்கடை யூர், டீ. மணல்மேடு, பிள்ளைபெருமாநல்லூர், வளையல்சோழகன், நட்சத்திரமாலை, காடுவெட்டி, நடுவலூர், ரவணியன்கோட்டகம், கண்ணங்குடி, கிள்ளியூர், சரபோஜிராஜபுரம், சீவகசிந்தாமணி, அபி ஷேகக்கட்டளை, பிச்சைக்கட்டளை, காலக்கட்டளை, தாழம்பேட்டை, வேப்பஞ்சேரி, குருவிகுளம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இங்குள்ள அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு தினம்தோறும் ஆயி ரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவர்களுக்கு திடீரென உடல்நிலை சரியில்லை என்றாலும், விபத்து ஏற்பட்டாலும் முதலுதவிக்காக இந்த மருத்துவமனைக்குத் தான் வருகின்றனர்.  இந்தநிலையில் மக்களுக்குப் பயன்படும் ரூ 70 ஆயிரம் மதிப்பிலான இசிஜி கருவியை தனது சொந்த செலவில் திருக்கடையூர் கணேச குருக்கள் சுகாதார நிலைய மருத்துவர்களிடம் வழங்கினார். அப்போது ஒன்றியக் குழு துணைத் தலைவர் பாஸ்கரன், மருத்துவர்கள், செவிலியர்கள் உடனிருந்தனர்.

கும்பகோணம் சகஸ்ரா கல்விக் குழுமம் சார்பில்  உலகச் சுற்றுலா தினக் கண்காட்சி

கும்பகோணம், செப்.25- உலகச் சுற்றுலாதினத்தை முன்னிட்டு தமிழ்நாடுஅரசு சுற்றுலாத்துறை மற்றும் கும்பகோணம் சகஸ்ரா கல்விக் குழுமம்  சார்பில் உலகச் சுற்றுலாதின சிறப்புக் கண்  காட்சி கும்பகோணத்தில் நடைபெற்றது.  சகஸ்ரா கல்விக் குழும தலைவர் வீர மணி தலைமை வகித்தார். தாளாளர் கலை வேந்தன் வரவேற்றார் கண்காட்சியை மாவட்டச் சுற்றுலாத்துறை அதிகாரி கே. நெல்சன் துவக்கி வைத்தார் மாநிலங்க ளவை உறுப்பினர் எஸ்.கல்யாணசுந்தரம் கும்பகோணம் ஒன்றியப் பெருந்தலைவர் காயத்ரி அசோக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கண்காட்சியில் கும்பகோணம் சுற்று வட்டாரத்தில் மிகவும் பெயர் பெற்ற 11 புவிசார் குறியீடு பெற்ற குத்துவிளக்கு, உலோகச் சிலைகள், தஞ்சாவூர் பெயிண் டிங், தலையாட்டி பொம்மை, நாதஸ்வரம், நெட்டி வேலைகள், வெற்றிலை, வீணை ஆகியவை இடம்பெற்றிருந்தன. இதுகுறித்து சகஸ்ரா கல்விக்குழுமத் தலைவர் வீரமணி தெரிவித்ததாவது:- கும்பகோணம் சகஸ்ரா கல்வி குழுமக்  கல்லூரியில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் டூரிசம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று உலகளாவிய வேலை வாய்ப்பைப்  பெற்று வருகிறார்கள் நிகழ்ச்சிவில் சகஸ்ரா கல்விக் குழும  இயக்குநர்கள் அசோக் குமார் சண்முக நாதன் ரமேஷ் கார்த்திகேயன் ராமநாதன், ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தொழிற்கல்வி படித்தவர்கள் 10, 12 வகுப்புகளுக்கு  இணையான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை, செப்.25-  தொழிற் பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தெரி வித்துள்ளதாவது: தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, தொழிற் பயிற்சி நிலை யங்களில் பயிற்சி முடித்துச் செல்லும் திறன்  பெற்ற பயிற்சியாளர்கள் மேற்படிப்பினை தொடர 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்க  ஆணையிடப்பட்டுள்ளது. இணையான சான்றிதழ்கள் பெற நிலையான வழிகாட்டு தல்களை வெளியிட்டுள்ளது. தற்போது அகில இந்திய தொழிற் தேர்வு  முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், தமி ழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் நடத்  தப்பட்ட மொழித்தேர்வில் தனித்தேர்வர் களாக கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள  ஐடிஐ தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இணை யதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து உரிய கல்வி சான்றிதழ்களை இணைத்து திருக்கோகர்ணம் பகுதியில் அமைந்துள்ள புதுக்கோட்டை அரசுத் தொழிற் பயிற்சி நிலையத்தில் நேரிலோ  அல்லது தபால் மூலமாக விண்ணப்பிக்க லாம்.  விண்ணப்பத்தை ஆய்வு செய்து தகுதி யான விண்ணப்பதாரர்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் இருந்து தகு திக்கேற்ப 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்  புக்கு இணையான சான்றிதழ் பெற்று இத்துறையால் வழங்கப்படும். விண்ணப்  பம் மற்றும் உரிய கல்விச்சான்றிதழ்களுடன் புதுக்கோட்டை அரசு தொழிற்பயிற்சி நிலை யத்தில் அக்டோபர் 3-ஆம் தேதிக்குள் சமர்ப்  பிக்க வேண்டும்.

“போலி மருந்தாளுநர்களைக் களையெடுக்க வேண்டும்”

புதுக்கோட்டை, செப்.25-  முறையான மருந்தியல் கல்வியைப்  பெறாமல் மருந்துகள் வழங்கும் போலி  மருந்தாளுநர்களை களையெடுக்க  வேண்டு மென தமிழ்நாடு அனைத்து பதி வுற்ற மருந்தாளுநர்கள் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் டி.கார்த்திக் கூறினார். உலக மருந்தாளுநர்கள் தினத்தை முன்  னிட்டு அவர் கூறியதாவது:- உயிர் காக்கும் மருந்துகளை வழங்கு வதில் மருந்தாளுநர்களின் பணி மிகவும் முக்கியமானது. மருந்தில் கலப்படம் எவ் வாறு ஏற்றுக்கொள்ள இயலாதோ, அது போல மருந்தாளுநர்களிலும் கலப்படம் கூடாது. முறையான மருந்தியல் கல்வி யைப் பெறாமல் மருந்து கடைகளில் வேலை பார்த்துவிட்டு மருந்தை வழங்கும் நபர்கள் போலி மருந்தாளுநர்கள் என் பதே உண்மையாகும். பயிர்களுக்கு இடையே முளைக்கும் களைச் செடிகளைப் போன்று மருந்தியல்  துறையில் முளைத்துள்ள இந்த போலி மருந்  தாளுநர்களையும் களை எடுக்க வேண்டி யது காலத்தின் கட்டாயம். வெளிநாடு களைப் போன்று இந்தியா போன்ற  வளர்ந்த நாடுகளிலும் மருந்தாளுநர் களுக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்  டும். மருந்தாளுநர்களைத் தவிர வேறு யாரும் மருந்தகங்கள் தொடங்க அனுமதி வழங்கக் கூடாது.  ஒவ்வொரு அரசு மற்றும் தனியார் மருத்  துவமனைகளிலும் மருத்துவரின் பரிந்துரை  சீட்டுக்கு ஏற்ப மருந்துகளை உட்கொள்ளும்  முறைகளை தெளிவாக எடுத்துரைக்க ஒவ்வொரு இடங்களிலும் மருந்தாளுநர் கள் நியமிக்க வேண்டும். “மருந்தகங்களில் மருந்தாளுநர்கள் மட்டுமே” என்ற முழக்கம்  மருந்தாளுநர்கள் தினத்திலிருந்து ஒலிக் கட்டும் என்றார்.

வரி கட்டாவிட்டால் அபராதம்: ஜெயங்கொண்டம் நகராட்சி அறிவிப்பு

அரியலூர், செப்.25- வரிகட்டாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் ஜெயங்  கொண்டம் நகராட்சி அறிவித்துள்ளது. நகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்  பில், “ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு செலுத்த  வேண்டிய 2023-24- ஆம் ஆண்டின் முதல் அரையாண் டுக்கான சொத்து வரியை உரிமையாளர்கள் செப்.30- ஆம்  தேதிக்குள் செலுத்த வேண்டும் தவறும் பட்சத்தில் வருகிற  அக்டோம்பர் மாதம் முதல் நிலுவை தொகைக்கு ஒவ்வொரு மாதத்துக்கு ஒரு சதவீதம் அபாராதம் விதிக்கப்படும். அந்தத் தொகை செலுத்தப்படும் வரை அபராதம்  இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியை அக்டோம்பர் 1- ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை செலுத்தி ஐந்து சதவீத ஊக்கத்தொகை பெறலாம். பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்” எனக் கூறியுள்ளார்.

காலமானார்

 திருவாரூர், செப்.25- திருவாரூர் மாவட்டம் திருவீழிமிழலையைச் சேர்ந்த  பெ.அஞ்சலை அம்மாள் காலமானார். குடவாசல் திருவீழிமிழலை கிராமம் கலுங்கடி தெரு வில் வசிக்கும் மூத்த தோழர் ப.பெரியான் அவர்களின் மனைவியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றி யக்குழு உறுப்பினர் பெ.செல்வராஜ், தமிழ்நாடு அரசுப்  போக்குவரத்தில் நடத்துனராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற  தோழர் பெ.வரதராஜன் ஆகியோரின் தாயார்மான பெ. அஞ்சலை அம்மாள் சனிக்கிழமை காலமானார். அன்னாரது மறைவுச் செய்தியறிந்து கட்சியின் திரு வாரூர் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாவட்டச்  செயற்குழு உறுப்பினர் எம்.சேகர், குடவாசல் வடக்கு பகுதி ஒன்றியச் செயலாளர் கே.ரவிச்சந்திரன், மாவட்டக்  குழு உறுப்பினர்கள் டி.வீரபாண்டியன், ஏப்.கெரக் கோரியா, ஒன்றிய குழு உறுப்பினர்கள் அஞ்சலை அம்  மாள் உடலுக்கு மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர். இறுதி நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஒலைச்சுவடிகளை  பயன்படுத்த அறிவுறுத்தல்

பாபநாசம், செப்.25- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சிராஜுல் மில்லத் அப்துல் சமது தமிழ்ப் பேரவை மற்றும் ராஜகிரி தாவுது  பாட்ஷா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை  சார்பில் “கம்பனின் கவிநயம்” என்ற தலைப்பில் கவி யரங்கம் ஆர்.டி.பி கல்லூரியில் நடந்தது. தமிழ்த்துறைத் தலைவர் கோகிலா தேவி வரவேற்றார். ஆர்.டி.பி கல்விக்  குழும இயக்குநர் காரல் மார்க்ஸ், கல்லூரி முதல்வர்  முஹமது முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  கோவிந்தகுடி இளைஞர் நற்பணி மன்ற மேல்நிலைப்  பள்ளித் தாளாளர் அப்துல் லத்தீப், தஞ்சாவூர் சரஸ்வதி  மஹால் நூலக தமிழ் ஓலைச்சுவடி துறைத் தலைவர் மணி மாறன், ஆர்.டி.பி. கல்விக் குழுமச் செயல் தலைவர் அஹமது ராஜா, கல்லூரி துணை முதல்வர் தங்கமலர், அனைத்துத் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். தமிழ்த் துறைப் பேராசிரியர் சசிகலா நன்றி கூறினார்.  நிகழ்வில் பேசிய மணிமாறன், “ஓலைச்சுவடி நம்  நாட்டில் பயன்படுவதை விட, லண்டனில் நம்முடைய ஓலைச்சுவடி மற்றும் கல்வெட்டைப் பயன்படுத்தித் தான்  வானிலையைக் கணித்துச் சொல்வர். தமிழ்நாட்டில் ஓலைச் சுவடியைப் பயன்படுத்த வேண்டும்” என்றார். 

ஏ.வி.சி. கல்லூரியில் கணினியியல் துறை கருத்தரங்கு

மயிலாடுதுறை செப்.25- மயிலாடுதுறை, மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரியில் கணினி யியல் துறை கருத்தரங்கு நடைபெற்றது. மயிலாடுதுறை, மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரி (தன்னாட்சி) கணினியியல் துறை சார்பில் பல்நோக்குக் கருத்தரங்கம் நடை பெற்றது. கணினியியல் துறைத் தலைவர் எம். முத்தமிழரசன் துவக்க  உரையாற்றினார். கல்லூரி முதல்வர் ஆர்.நாகராஜன் “இன்றைய சூழலில் கணினியியல் முக்கியத்துவம் மற்றும் பயன்பாடுகள்” குறித்து  சிறப்புரையாற்றினார். கல்லூரியின் கல்வி ஆலோசகர் முனைவர். எம்.மகாலெட்சுமி, “தகவல் தொழில் நுட்பத்தின் அவசியம் இன்றி யமையாமை குறித்துப்” பேசினார்.  கணினியியல் முதுநிலை இரண்டாம் மாணவி ஜோஷலின் ஜாய் ஹாஸானா “டிஜிட்டல் உலகு”, “டெக்னோவேஷன்” என்ற தலைப்பில்  இளநிலை மூன்றாம் ஆண்டு மாணவி சௌவுந்தர்யா ஆகியோர். பதினைந்திற்கும் மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து 300 மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டனர்.  வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. அதிகப் பதக்கம் வென்ற கடலூர் செயின்ட் ஜோசப்  கல்லூரி சாம்பியன் பட்டத்தை வென்றது. வெற்றி பெற்ற மாண வர்களுக்கும், கல்லூரிகளுக்கும் கல்லூரி முதல்வர் சான்றுகள் வழங்கி னார். நிகழ்விற்கான ஏற்பாடுகளை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் எம்.ஹேம மாலினி, வி.ஆர்.கீதா ஆகியோர் செய்திருந்தனர். கணினி யில் மூன்றாம் ஆண்டு மாணவி சி.மனோகரி வரவேற்றார். மாணவி ஆர். பார்கவி நன்றி கூறினார்.

குட்டியாண்டியூர் மீனவக் கிராமத்தில் தடுப்புச்சுவர் கட்டுமானப் பணி தொடக்கம்

மயிலாடுதுறை, செப்.25- மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகேயுள்ள குட்டியாண்டியூர் மீனவக் கிராமத்தில் கடலரிப்பை தடுக்க நேர் கல்  தடுப்புச் சுவர்- மீன் இறங்குதளம், ஏலக் கூடம் அமைக்கும் பணி திங்களன்று நடை பெற்றது. குட்டியாண்டியூர் மீனவ கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் பைபர், விசைப் படகுகள் மூலம் மீன்பிடித் தொழி லில் ஈடுபட்டு வருகின்றனர். குட்டியாண்டி யூரில் கடலரிப்பு காரணமாக கரையில் படகு களை நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டது.  இதைத் தடுக்க கருங்கல் தடுப்புச் சுவர்  அமைக்க வேண்டுமென மீனவர்கள் கோரி க்கை விடுத்திருந்தனர். இதையடுத்து இப்  பணிக்காக மீன்வளம்- மீனவர் நலத்துறை சார்பில் நபார்டு வங்கி நிதி உதவியுடன் ரூ. 6  கோடியே 83 லட்சம் ஒதுக்கீடு செய்தது.  இப் பணிகள் திங்களன்று தொடங்கி யது. மீன்பிடித் துறைமுகத் திட்டச் செயற்  பொறியாளர் (நாகை) ராஜ்குமார் தலைமை  வகித்தார். உதவிச் செயற்பொறியாளர் ரபீந்திரன், மீனவ பஞ்சாயத்தர்கள் முன் னிலை வகித்தனர். பூம்புகார் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் பணி களை தொடங்கி வைத்தார். மீன்வளத்துறை உதவிச் பொறியாளர் கௌதமன், ஆய்வாளர் பாலசுப்ரமணியன், பேரூராட்சி மன்றத் தலைவர் சுகுண சங்  கரி, செம்பனார்கோவில் ஒன்றியக் குழுத்  தலைவர் நந்தினி உள்ளிட்ட பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஆக்கூர் முக்கூட்டு பகுதியில்  தொடரும் சாலை விபத்துக்கள்

மயிலாடுதுறை, செப்.25-  மயிலாடுதுறை மாவட்டம், ஆக்கூர் முக்கூட்டுப் பகுதியில் சாலை விபத்துக் களைத் தவிர்க்க முக்கூட்டில் ரவுண்டானா வளைவு அமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. ஆக்கூர் சிறப்புலிநாயனார் வீதியைச் சேர்ந்த ராமன் மகன் ராஜா (27) சனிக்கிழமை  இரவு தனது இருசக்கர வாகனத்தில் ஆக்கூர்  முக்கூட்டிலுள்ள கடைக்குச் சென்றுவிட்டு,  திரும்பும்போது எதிரே வந்த இருசக்கர வாக னம் ராஜா மீது மோதியது. இதில் நிலை தடு மாறிய ராஜா சாலையில் விழுந்தார். அப் போது திருக்கடையூரிலிருந்து சிதம்பரம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தின் பின்புற  டயர் ராஜாவின் தலையில் ஏறி இறங்கியது.  இதில் அவர் உயிரிழந்தார். தகவலறிந்த பொது மக்கள், மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், விபத்  திற்குக் காரணமானவர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட  குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க  வேண்டுமென வலியுறுத்தியும் விபத்து களைத் தடுக்க ரவுண்டானா வளைவு அமைக்கக் கோரியும் மறியலில் ஈடுபட்ட னர்.  இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செம்பனார்கோவில் ஒன்றியச்  செயலாளர் கே.பி.மார்க்ஸ் கூறுகையில்,  “ஆக்கூர் முக்கூட்டு, பூந்தாழை,தலச்சங் காடு பகுதிகளில் தொடர்ந்து சாலை விபத்துக்கள் ஏற்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக நடைப்பெற்றுவரும் நான்கு வழிச்சாலை பணியே இதற்கு முக்கியக் காரணம். மேலும் சாலைப் பணிக்கான பொருட்களை ஏற்றிவரும் வாகனங்கள் அதிவேகமாக வருவதால் விபத்து ஏற்படு கிறது. முன்னெச்சரிக்கை பலகைகள் இல்லாதது, பாதுகாப்பு நடைமுறைகளை முறையாக செயல்படுத்தாதும் காரணம்.  விபத்துக்களைத் தவிர்க்க ஆக்கூர் முக்கூட்டில் ரவுண்டானா வளைவு அமைக்க வேண்டுமென்றார்.

கீழபஞ்சப்பூர் பகுதியை மேற்கு வட்டாட்சியர்  அலுவலகத்தோடு இணைக்கக் கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, செப்.25- திருச்சிராப்பள்ளியில் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் திங்களன்று ஆட்சியர்  பிரதீப்குமார் தலைமையில் மக்கள் குறை தீர் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அகில இந்திய விவசாயத்  தொழிலாளர்கள் சங்க மாவட்டத் துணை செயலாளர் தங்கராஜூ, மாவட்டச் செயலா ளர் ராஜேஷ்கண்ணா, மாவட்டத் தலைவர்  தங்கதுரை, துணைச் செயலாளர் செல்வ ராஜ், அரசாயி, விவசாயிகள் சங்க மாவட்டச்  செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறப்பட்டி ருந்ததாவது: திருச்சிராப்பள்ளி மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்டது கீழபஞ்சப்பூர். இப் பகுதி மக்கள் வருவாய் துறையின் மூலம்  சான்றிதழ்கள் பெற மேற்கு வட்டாட்சி யர் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டி யுள்ளது. முதியோர்கள், விதவைகள்,  மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை கள் பெற கிழக்கு வட்டாட்சியர் அலுவல கத்திற்கு செல்ல வேண்டியுள்ளது.  இப்பகுதியிலுள்ள வீடுகள், நன்செய் நிலங்கள், காலிமனை நிலஅளவை செய்ய  கொடுக்கப்படும் மனுக்கள் கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்திற்குச் சென்று வருகிறது. இதனால் மக்களுக்கு குழப்ப மான நிலை ஏற்படுகிறது. வருவாய்த்துறை சம்மந்தமான அனைத்துப் பணிகளையும் மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு மாற்ற வேண்டும். கீழப்பஞ்சப்பூர் பொன்மலை கோட்டத் திற்கு உள்ளடங்கியுள்ளது. இப்பகுதி மக்  கள் வீட்டுவரி, குடிநீர்இணைப்பு, தொழில்  வரி மற்றும் நிலஅளவை செய்ய மாநக ராட்சியின் அரியமங்கலம் கோட்டத்திற்குச்  செல்ல வேண்டியுள்ளது. இவை யனைத்  தையும் அரியமங்கலம் கோட்டத்திலிருந்து பொன்மலை கோட்டத்திற்கு மாற்ற வேண்  டும் எனக் கூறப்பட்டிருந்தது.