districts

img

தேனி மாவட்டத்தில் கனமழை மேகமலை அருவியில் வெள்ளப்பெருக்கு

தேனி, மே 15- தேனி மாவட்டத்தில் ஞாயிறன்று பெய்த கோடை மழையால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது .மேகமலை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள் ளது. கும்பக்கரை அருவியில் குளிக்க வனத்  துறையினர் இரண்டாம் நாளாக  தடை விதித்துள்ளனர். தேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. திங்க ளன்று  மாலையில் பெரியகுளம், வீரபாண்டி  பகுதியில்  கனமழை பெய்தது. இதன் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. செவ்வாய்க்கிழமை காலை நில வரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 51.48 அடியாக இருந்தது .அணைக்கு நீர்வரத்து 197 கன அடியாக இருந்தது. பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கு 1572 கன அடி நீர் திறக்கப்படுகிறது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 115.10 அடியாக உள்ளது. 405 கன அடி நீர் வருகிறது .திறப்பு 100 கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 44 அடி.நீர்வரத்து 73 கன அடி .சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம்  103.81 கன  அடி. அணைக்கு நீர் வரத்து 40 கன அடி .3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. கும்பக்கரை அருவியில்  குளிக்கத் தடை பெரியகுளம் அருகே உள்ள மேற்கு  தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்  துள்ள கும்பக்கரை அருவியில், அருவிக்கு மேல் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் வட்டக்காணல், வெள்ளகெவி உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்  பட்டுள்ளது. இதனால் அடுத்த அறிவிப்பு வரும் வரை அருவியில் குளிக்க இரண்டாம் நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. கடமலைக்குண்டு  தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியம் கோம்பைத்தொழு அருகே மேகமலை அருவி அமைந்துள்ளது. மேகமலை வனப் பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு அருவியில் நீர்வரத்து ஏற்பட்டது. இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து  ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிக்கு வந்து சென்றனர். தொடர்ந்து மேகமலை வனப்பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் அருவியில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வந்தது. இந்த நிலையில் மே 14 செவ்வாய்க்கிழமையன்று மதியம் மேகமலை வனப்பகுதியில் சுமார்  2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. அதன் காரணமாக மாலை அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள காரணத் தால் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தற்காலிக தடை விதித்துள்ளனர். மேலும் அத்துமீறி யாரும் குளிக்கக் கூடாது என்பதற்காக தொடர்ந்து அருவியில் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

;