புதுக்கோட்டை, செப்.3 - பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளி களை விடுதலை செய்த குஜராத் பாஜக அரசை கண்டித்து புதுக்கோட்டையில் அனை த்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மாவட்டத் தலைவர் எஸ்.பாண்டிச்செல்வி தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் பி.சுசீலா, மாநிலக் குழு உறுப்பினர் டி.சலோமி, மாவட்டப் பொரு ளாளர் ஜெ.வைகைராணி உள்ளிட்டோர் பேசி னர். பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் 11 பேரையும் விடுதலை செய்த குஜராத் பாஜக அரசை கண்டித்தும், பாஜக ஆளும் மாநி லங்களில் தொடர்ந்து நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்தும் ஆர்ப்பாட் டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.