சென்னை, நவ. 15 - மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் விடுத்துள்ள இரங்கல் செய்தி வருமாறு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் நா.பாலசுப்பிரமணியன் (வயது 55) உடல்நலக் குறைவால் உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப் பட்டு தீவிர சிகிச்சைக்கு பின் குணமடைந்தார். அதன் பாதிப்பில் தொடர் சிகிச்சை பெற்று வந்த அவர், உடல் நலம் பாதிக்கப்பட்டு திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி ஞாயிறு (14.11.2021) இரவு உயிரிழந்துள்ளார். அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. நா.பாலசுப்பிரமணியன் படிக்கும் பருவத்திலேயே ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் மாணவர் சங்கம்வா, லிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளராகவும், திருவாரூர் சிஐடியு மாவட்டச் செயலாளராகவும், தற்போது ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் மாநில தலைவராகவும் செயல்பட்டார்.