கரூர், மார்ச் 15 - மாமேதை மார்க்ஸ் நினைவு தினம் கரூரில் கடைப்பிடிக்கப்பட்டது. மார்க்சிய, அம்பேத்கரிய, பெரியாரிய சிந்தனையாளர்களின் கரூர் ஒருங்கி ணைப்புக் குழு சார்பில் புகளூர் வேலா யுதம்பாளையம் மலை வீதியில் காரல் மார்க்ஸ் நினைவு தின சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. சிபிஐ ஒன்றியச் செயலாளர் சண்முகம், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமை வகித்த னர். புகளுர் நகர்மன்ற திமுக தலைவர் குண சேகரன், தொமுச மாவட்ட தலைவர் அண்ணாவேலு, தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தின் சார்பில் ஐ.ஜான்பாஷா, தி.க. குமாரசாமி, காங்கிரஸ் பழனியப்பன் ஆகியோர் மார்க்ஸ் வாழ்க்கை சம்பவங்களை நினைவுகூர்ந்து பேசினர். மார்க்சிய, அம்பேத்காரிய, பெரியாரிய சிந்தனையாளர்கள் கரூர் ஒருங்கிணைப்பு குழு சார்பில் கே.சண்முகம், கு.பழனிசாமி மற்றும் மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.