districts

img

ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்க மின் ஊழியர் மத்திய அமைப்பு போராட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 4-

      மின்வாரிய தொழிற்சங்கங்களு டன் கடந்த 2018 ஆம் ஆண்டு போடப்  பட்ட ஒப்பந்தத்தின்படி 6.1.1998 ஆம்  ஆண்டு முதல் இன்று வரை பணி புரியும் ஒப்பந்த ஊழியர்களை அடை யாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய  வேண்டும்.

    காலியாக உள்ள கள உதவியாளர் பணியிடங்களில் ஒப்பந்த ஊழியர்களை தினக்கூலி அடிப்படையில் நியமித்து நிரந்தரம் செய்ய வேண்டும். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல்  பணிபுரியும் ஒப்பந்த தொழிலா ளர்களை ‘திமுக ஆட்சிக்கு வந்த வுடன் நிரந்தரம் செய்வோம்’ என  முதல்வர் ஸ்டாலின் அறிவித்த வாக்குறுதியை நிறைவேற்றிட வேண்டும்.

   மின் வாரியம் தன்னிச்சை யாக முடிவெடுத்து, தொழிலாளர் களின் உரிமைகளையும், சலுகை களையும் பறிக்கும் கே2 அக்ரீ மெண்ட் நடைமுறையை ரத்து செய்ய  வேண்டும். தமிழக அரசு அதிகாரிகள், அங்கீ காரம் பெற்ற தொழிற்சங்க பிரதிநிதி கள், மின் வாரிய அதிகாரிகள் அடங் கிய முத்தரப்பு பேச்சுவார்த்தை (சிட்  அக்ரீமெண்ட்) முறையை நடை முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்  நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு  சார்பில் செவ்வாயன்று மாநிலம் தழு விய அளவில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

    திருச்சி பெருநகரம் வட்டம் சார் பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடந்த போராட்டத்திற்கு சங்க மாநில துணைத்தலைவர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி சங்க வட்டத் தலைவர் நடராஜன், வட்டச் செயலா ளர் எஸ்.கே.செல்வராசு, வட்ட பொரு ளாளர் பழனியாண்டி, டி.என்.பி.ஓ மாநில துணை பொதுச் செயலாளர் இருதயராஜ் ஆகியோர் பேசினர். பின்னர் கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்தனர்.

தஞ்சாவூர்

     தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய  அமைப்பு தஞ்சாவூர் மின் வட்டக்  கிளை சார்பில் மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் நடைபெற்ற மனு கொடுக்கும் போராட்டத்திற்கு வட்டத் தலைவர் ஏ.அதிதூதமைக் கேல் ராஜ் தலைமை வகித்தார். சிஐ டியு மாவட்டச் செயலாளர் சி.ஜெய பால், மின் ஊழியர் மத்திய அமைப்பு  கௌரவ தலைவர் து.கோவிந்தராஜ், சிஐடியு மாவட்ட துணைச் செயலா ளர் கே.அன்பு, மின் ஊழியர் மத்திய அமைப்பு வட்டச் செயலாளர் பி. காணிக்கை ராஜ், வட்டப் பொருளா ளர் எஸ்.சங்கர், வட்ட துணைத்தலை வர் எம்.ஆரோக்கியசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.  இதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சி யரின் நேர்முக உதவியாளரிடம் 390  கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட் டன.

 மயிலாடுதுறை

    மயிலாடுதுறை மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு நடைபெற்ற  போராட்டத்திற்கு, சிஐடியு மாவட்டத் தலைவர் ஆர்.ரவீந்திரன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செய லாளர் ப.மாரியப்பன், மாவட்ட இணைச் செயலாளர் ஆர்.ராமானு ஜம், திட்டச் செயலாளர் எம்.கலைச்செல்வன், இணைச் செய லாளர் ஜி.இளவரசன் உள்ளிட்டோர் பேசினர். இறுதியாக, கோரிக்கை கள் அடங்கிய மனுக்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த னர்.

திருவாரூர்

     திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு அமைப்பின் திட்ட  துணைத் தலைவர் எஸ்.மோகனசுந்த ரம் தலைமை வகித்தார். மாநில துணை பொதுச்செயலாளர் மோகன்  சிறப்புரையாற்றினார்.  

புதுக்கோட்டை

     புதுக்கோட்டை மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் அருகே நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மின்  ஊழியர் மத்திய அமைப்பின் புதுக் கோட்டை திட்டத் தலைவர் எஸ்.சித்தையன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி திட்டச்  செயலாளர் கு.நடராஜன், சிஐடியு  மாவட்டத் தலைவர் க.முகமதலி ஜின்னா, பொருளாளர் எஸ்.பால சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பேசி னர்.

;