1980-ஆம் ஆண்டுகளில் குளிர்பானம் என்றதும் நம் நினைவுக்கு வருவது கோலி சோடாதான். வீட்டுக்கு விருந்தினர் வந்ததும் பெட்டிக் கடை அல்லது பலசரக்குக் கடைக்கு சென்று கோலி சோடா வாங்கித் தருவோம்.
குளிர்பானங்கள் எத்தனை வந்தாலும் கோலி சோடா மவுசு குறையவில்லை. தமிழ்நாட்டில் முதன் முதலில் வேலூரில் தான் கோலி சோடா தயாரானது. வேலூ ரைச் சேர்ந்த கண்ணுசாமி முதலி யார் கோலிசோடா தயாரித்து முதன் முதலில் விற்பனை செய்ய விரும்பி னார்.
இதற்காக ஜெர்மனியில் இருந்து கோலி சோடா பாட்டில் இறக்குமதி செய்தார். இதற்காக அவர் ரூ.2,500-ஐ ஜெர்மன் நிறு வனம் ஒன்றிற்கு அனுப்பி வைத் தார். முதன் முதலில் தயார் செய்யப் பட்ட கோலி சோடா பாட்டில் இன்றும் வேலூரில் உள்ள கண்ணன் சோடா கம்பெனியில் அவரது தலைமுறையினர் பாது காப்பாக வைத்துள்ளனர். அதில் மேட் இன் ஜெர்மனி என எழுதப் பட்டுள்ளது.
கண்ணுசாமி முதலியாரால் தொடங்கப்பட்ட கோலி சோடா 100-வது ஆண்டை எட்டி வரு கிறது. 100-ஆவது ஆண்டை நோக்கிப் பயணிக்கும் கண்ணன் அண்ட் கோ. கோலி சோடாவின் மூன்றாம் தலைமுறை உரிமையா ளர் மோகன கிருஷ்ணன் கூறுகை யில், ஒருநபர் 73 ஆண்டுகளுக்குப் பிறகு எங்களது கோலிசோ டாவை சுவைத்துவிட்டு, இன்றைக் கும் அதே தரத்தில் இருப்பதாகக் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், 1990-ம் ஆண்டு முற்பகுதி வரை சோடா விற்பனை அதிகமாக இருந் தது. அதற்கு பிறகு வெளிநாட்டு குளிர்பானங்கள் வந்ததால் ஓரளவு விற்பனை குறைந்தது. இந்தக் காலத்தில் கொண்டுவரப்பட்ட தாராள மயமாக்கல் கொள்கை யால் சர்வதேசஅளவிலான உற்பத்தியாளர்கள் இந்தியாவிற்கு வந்தனர். இருப்பினும் கோலி சோடா உற்பத்தி யில் நாங்கள் தொ டர்ந்து வெற்றியையே சந்தித்தோம். பானங் கள் தரமாக இருப்பதை உறுதி செய்துள்ளோம். அதில் எந்த சமர சத்தையும் செய்து கொள்ள விரும்ப வில்லை என்றார்.
ஒப்பீட்டளவில் சாதா ரண வணிகம் என்று அழைக்கப்பட்டு வந்த கோலி சோடா உற்பத்தி 2017- ஆம் ஆண்டு விற்பனை யில் ஏற்றம் கண்டது, ஏனெ னில் கோலி சோடா தமிழ கத்தில் ஜல்லிக்பட்டு போராட்டத் தின் போது ‘உள்ளூர்களுக்கான குரல்’ உணர்வு வேகத்தை அதிகரித்தது. அப்போதிருந்து, கோலி சோடா மிகவும் பிரபலமாகிவிட்டது.
இது குறித்து மோகனகிருஷ்ண னின் மகன் எம்.ஆனந்தகிருஷ்ணன் கூறுகையில், இப்போது நாங்கள் சிறிய கடைகள் மட்டுமல்லாது மற்றும் ஹோட்டல்களில் விற்கிறோம். திருமண விழாக்கள் மற்றும் பல நிகழ்வுகளுக்கு சப்ளை செய்கிறோம் என்றார். இன்று, கண்ணன் அண்ட் கோ கோலி சோடா பாட்டில்களை உத்தரபிரதே சத்தின் ஃபிரோசாபாத்தில் இருந்து பெறுகிறது.
114 ஆண்டுகள் பழமையான மதுரை மாப்பிள்ளை விநாயகர்
அதே நேரத்தில் மல்லி கைக்குப் பெற்ற மதுரை கோலிசோடா உற் பத்தியிலும் முத்திரை பதித்துள்ளது என்றால் மிகையல்ல. மாப் பிள்ளை விநாயகர் சோடா என்றால் மதுரை யில் பிரபலம். மதுரை நேதாஜி சாலையில் செயல்பட்டு வருகிறது. வேலூர் கோலி சோடா தயா ரிப்பைத் தொடர்ந்து மதுரை மாப்பிள்ளை விநாயகர் சோடா தயாரிப்பு நிறுவனத் தின் கதிர்வேலின் மகன் அம்பலவா னனிடம் வெள்ளியன்று பேசிய போது, “1907-1909-ஆம் ஆண்டு களிலேயே மதுரையில் சோடா உற்பத்தி செய்தோம். முதலில் ஜெர்மனியிலிருந்து பாட்டில்களை உற்பத்தி செய்தோம். இன்றைக் கும் மாப்பிள்ளை விநாயகர் சோடா விற்கு வாடிக்கையாளர்கள் உள்ளனர். முன்னர் 100 தொழி லாளர்கள் வேலை பார்த்து வந்தனர். இப்போது இயந்திரங்கள் வந்துவிட்டதால் பத்து தொழிலா ளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனம் மதுரையில் 114 ஆண்டுகளாக உள்ளது.
சின்னாளபட்டி காதலோ
1975-ஆம் ஆண்டுகளில் சிறு குழந்தைகளுக்கு வயிற்றுவலி என்றால் அந்தக் காலத்தில் பெரிய வர்கள் லவ்ஒ வாங்கிக் கொடுப்பார் கள். அதாவது ஆங்கிலத்தில் காதலோ (Kathalo) என்றழைப்பா ளர்கள். இதன் சுவையோ அலாதி யானது. இன்றைக்கு மதுரையில் லவ்ஒ கலரையே பார்க்கமுடிய வில்லை.
உள்நாட்டு தயாரிப்பான பவண்டோ
அதே நேரத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் சந்தை பரப்பினா லும் 1916-ஆம் ஆண்டு விருதுநக ரில் தொடங்கப்பட்ட (காளி ஏரேட்டட் வாட்டர் ஒர்க்ஸ்)காளி மார்க் நிறுவனத்தின் பவண்டோ-வை வாங்கி அருந்தும் வாடிக் கையாளர்கள் அதிகம் உள்ளனர்