அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் மொழியியல் உயராய்வு மையத்தின் தலைவராக பணியாற்றி வந்த வி.திருவள்ளுவனை, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த டிச.11 ஆம் தேதி அறிவித்திருந்தார். இந்நிலையில், திங்கட்கிழமை மதியம் 3 மணியளவில், வி.திருவள்ளுவன், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பொறுப்பேற்றுக் கொண்டார்.