இந்தியாவின் இருள் அகற்றுவோம், மோடி ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் என்ற முழக்கத்துடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் திருத்தணி பைபாஸ் சாலையில் வட்ட செயலாளர் வி.அந்தோணி தலைமையில் ஞாயிறன்று (செப் 4) நடைபெற்றது. மூத்த உறுப்பினர் சம்பந்தம் பைக் பிரச்சார பயணத்தை துவைக்கி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.பெருமாள் மாவட்ட குழு உறுப்பினர் அப்சல்அகமத், வட்டக்குழு உறுப்பினர்கள் பாலாஜி, கரிமுல்லா சின்னதுரை, ரீசர், ஜெய்சங்கர் கிளை செயலாளர்கள் ஜெயவேல், சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.