districts

img

வீரவெண்மணியின் வரலாறு மாணவர் மனதில் பதியட்டும்! - இரா.ஹரிசுர்ஜித்

மார்கழி மாதக்குளிரில் அனைவரும் நடு நடுங்கி உறங்கிய நேரத்தில் கீழவெண்மணிக் கிராம உழைப்பாளி மக்கள் 44 பேர் பண்ணை யார்கள் வைத்த கொடுந்தீயில் ராமய்யாவின் குடிசை யில் வெந்து மடிந்த வேதனையை எப்படி மறக்க முடியும் ....? ஆண்டுகள் 52 ஆனாலும் இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் 1968 டிசம்பர் 25 கீழவெண்மணி தியாகிகளின் தியாகத்தை வீரவர லாற்றை மென்மேலும் எடுத்துக்கூற வேண்டிய வர்க்க ஒற்றுமையுடன் கூடிய வரலாற்றுக் கடமை இந்திய மாணவர் சங்கத்திற்கு உண்டு. வீர வெண்மணி தியாகிகளின் நினைவாக இந்திய மாணவர் சங்கத்தின் சார்பாக தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராகவும், பெண்கள் மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிராகவும், கல்வி நிலையங்களில் சாதிய, மதவாத கருத்துக் களை புகுத்துவதற்கு எதிராகவும் மயிலாடுதுறை மண்ணில் 24.12.2021 மாலை 4 மணிக்கு பேரணி பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.  தேச விடுதலைக்கும், சமூக விடுதலைக்குமான போராட்டக் களத்தில் நின்று புறமுதுகு காட்டா மல் நெஞ்சை நிமிர்த்தி பாடுபட்டு சிறைக்கொடுமைக ளையும், சித்திரவதைகளையும் அனுபவித்தும், தூக்குக் கயிற்றுக்கும், துப்பாக்கிச்சூட்டிற்கும் பலியான பகத்சிங், ராஜகுரு, சுகதேவ், குதிராம்போஸ், உத்தம் சிங், வாஞ்சிநாதன், திருப்பூர் குமரன், வஉசி என வீரவரலாற்றில் தியாகிகளின் பெயர்கள்நீளும்

தடம் பதித்த கம்யூனிஸ்டுகள் வரலாறு

கம்யூனிஸ்ட் இயக்க வீர வரலாற்றில் நிலப்பிர புத்துவக் கொடுமைகளையும், மடாதிபதிகள், பண்ணையார்களின், அட்டூழியங்களையும் எதிர்த்து கம்யூனிஸ்டுகள் நடத்திய சமூக விடு தலைக்கான போராட்டத்தில் 1943இல் தென்ப ரையில் விவசாயிகள் சங்கம் துவங்கியதிலிருந்து தஞ்சைத் தரணியில் செங்கொடி இயக்கம்  விவசா யிகளின் பிரச்சனைகள் விவசாயக் கூலித் தொழிலா ளர்களின் ‘சாணிப்பால்’, ‘சவுக்கடி’ போன்ற சமூகக் கொடுமைகளிலிருந்து விடுதலை பெற சகல பகுதி மக்களையும் ஒன்றிணைத்துப் போராடி வெற்றிப்பெற முடிந்தது. 1944 இல் களப்பால் ஒப்பந் தத்தில் சாணிப்பால் சவுக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. 1952 இல் பண்ணையாள் பாது காப்பு சட்டம் போன்றவற்றிலும் 1962இல் நிலச் சீர்திருத்த சட்டம் மற்றும் பல முக்கியத்துவம் வாய்ந்த கூலி ஒப்பந்தங்கள், இவை யாவும் பல கட்ட தொடர் போராட்டங்கள் மூலம் கிடைத்த வெற்றியாகும். இக்களப் போராட்டத்தில் பல வீரர்களை நாம் பலி கொடுத்துள்ளோம். 1948 இல் நடேசன் துப்பாக் கிச்சூடு, களப்பால்குப்பு திருச்சி சிறையில் விஷம் கொடுத்து கொலை, 1950 இல்சிவராமன், இரணி யன் ஆறுமுகம் போன்ற இளம் கம்யூனிஸ்டுகள், பண்ணையார்கள் மற்றும் ஜமீன்தார்களின் அட்டூழியங்களை எதிர்த்த போரில் துப்பாக்கிச் சூட்டில் பலியாகினர். கோட்டுர் ராசு துப்பாக்கிச்சூடு, சீர்காழி வள்ளுவக்குடி பெருமாள் சிறையில் உயிரி ழப்பு, பூந்தாழங்குடி பக்கிரிசாமி துப்பாக்கிச்சூட்டில் பலி, கேக்கரை ராமச்சந்திரன், சிக்கல்பக்கிரிசாமி, இரிஞ்சியூர் சின்னப்பிள்ளை இவர்களின் படு கொலையின் தொடர்ச்சியாகவே வெண்மணி கொடூரச் சம்பவம் நடைபெற்றது.

கீழவெண்மணி படுகொலையும் பின்னணியும்

கீழவெண்மணி படுகொலை என்பது 1968 டிசம்பர் 25 இல் விவசாய கூலித் தொழிலாளர்கள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 44 பேர் ராமய்யாவின் குடிசையில் இரிஞ்சியூர் கோபாலகிருஷ்ணன் நாயுடு, இருக்கை ராம பிள்ளை போன்ற பண்ணையார்களும் அவர்களின் அடியாட்களும் வெண்மணி கிராமத்தில் புகுந்து வெட்டுடா.... குத்துடா.... கொளுத்துடா........ சுடுடா..... என சத்தம் போட்டுக் கொண்டு நடத்திய கொலைவெறி தாக்குதலில் வைத்த தீயில் எரிந்து வெந்து மாண்டனர்.   இதற்கு நெல் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர்கள் காலங்காலமாய் உழைப்பாளி மக்க ளின் நம்பிக்கைக்குரிய செங்கொடி இயக்கத்தை விட்டு விட்டு, அனைவரும் செங்கொடியை கீழே இறக்கிவிட்டு நெல் உற்பத்தியாளர் சங்க மஞ்சள் கொடியை ஏற்ற வேண்டும் என்பதை மறுத்த உறுதி யான அரசியல் போராட்டம்,அரைப்படி நெல் கூலி உயர்வு கேட்டு நடத்திய தொடர் வர்க்கப் போராட்டம், பண்ணையார்களின்ஆதிக்கத்தை எதிர்த்து சாதிக் கொடுமைக்கு எதிரான போராட்டங்கள்.  இந்த முப்பரிமாணங்களின் பிரச்சனைகளின் உச்சமே வெண்மணிப் படுகொலை ஆகும். வெண்மணி சம்பவத்திற்கு பிறகு கணபதியாபிள்ளை கமிஷன் அறிக்கை, அரசின் பல புதிய நலத்திட்டங்கள் குடி மனை பட்டா, நிலப் பகிர்வு ஆகியவை செங்கொடி இயக்கத்தின் சாதனையாகும். இச்சாதனைக்கு பின்னால் பல தியாகிகளின் தியாகமும் உயிர்ப் பலி யும் உள்ளது. நாணலூர் நடேசன் முதல் பேரளம் ஜெ. நாவலன் வரை பல எண்ணற்ற தியாகிகளை இம் மண்ணில் பலி கொடுத்துள்ளோம். அவர்களின் தியா கத்தை நெஞ்சில் சுமந்து வெண்கொடியைகையில் ஏந்தி அநீதிக்கு எதிராகப் போராடி முன்னேறுவோம்

கல்வி பெறுவதை தடுக்கும்  புதிய கல்விக் கொள்கை

புதிய கல்விக்கொள்கையானது மாநில அரசின் கல்வி உரிமையை பறிப்பதாகும். மாநிலத்தின் எல்லா வளர்ச்சியையும் தடுப்பதற்கு இது ஒரு தடைக் கல்லாக இருக்கும் என்று பலகல்வியாளர்கள் கருத்து கூறுகின்றனர். ஆனால் ஒன்றிய அரசாங்கம் இந்த கல்வி முறை மூலமாகமும்மொழித் திட்டத்தை கொண்டுவந்து அமல்படுத்துவதன் மூலம்சமஸ் கிருதத்தை இந்தியமொழியாக முன்னிறுத்துகிறது.  3 மற்றும் 5வகுப்பு முதல் 8 ஆம்வகுப்பு வரை பள்ளி மாண வர்களுக்கு பொதுத்தேர்வை வைத்து மாணவர்களை கல்வி பெற முடியாத அளவிற்கு தடுத்து விட இது உகந்ததாகும். 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை செமஸ்டர் (பருவத்தேர்வு) தேர்வு கொண்டு வந்து பாடச்சுமையை அவர்கள் மீது திணித்து கல்வியில் இருந்து விலக வைப்பதற்கு இந்த கல்வி முறையைத் திணிக்கிறது.  பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை இந்த கல்வி முறையை அமல்படுத்தி அதன் மூலம் அதன் பழைய பழமைவாதக் கருத்துக்களை வளர்த்தெடுக்க, தனியார் கல்வி நிறுவனங்களின் லாபவேட்டையைத் தொடர அதில் அரசும் நிர்வாகமும் லாபம் பெற அக்கல்வியை கொண்டு வருகிறார்கள். ஜனநாயகத்தை சிதைத்து சமூக நீதியை படுகுழியில் தள்ளுவதற்கும் இறை யாண்மையை வெறுப்பதற்கும் குலக்கல்வியை மறைமுகமாக கொண்டு வருகிறார்கள். உடனடி யாக இந்தக்கல்விக் கொள்கையை கடுமையாக எதிர்க்க வேண்டியுள்ளது.

பெண்கள், மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமை

இன்று நாடு முழுவதும் பெண்கள், மாணவி கள் மீதான பாலியல் வன்கொடுமை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பொது வெளிமட்டுமல்ல, பள்ளி, கல்லூரிகளில், பணிபுரியும் பணியிடங்க ளில் கூட அவர்களுக்கு பாதுகாப்பு கேள்விக்குறி யாகி உள்ளது. தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழு வதும் மிகவும் கொடூரமாக இந்த அநியாயம் நடந்து கொண்டிருக்கிறது. அது தினந்தோறும் நடை பெறும் செய்தியாக வருகிறது. மிகவும் மோசமாக கேவலமாக இழிவு நிலையாக இருக்கிறது. பிறந்த குழந்தை முதல் பள்ளி படிக்கும் சிறுமிகள், வயது வந்த பெண்கள், முதியவர்கள் என வயது வித்தி யாசம் இல்லாமல் பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறைகள் ஏராளம். பள்ளி, கல்லூரிகள் செல்லும் மாணவிகள், வேலை பார்க்கும் இடங்க ளில் பெண்கள் மீது பேருந்து நிலையம், ரயில் நிலை யம் போன்ற இடங்களில் பாலியல் அத்துமீறல் அதிகரித்து வருகிறது. பொதுவெளியில் பாதுகாப்பு இல்லாமல், பெண்கள் நடமாட முடியாத நிலை தொடர்கிறது.  ஆனால் குற்றங்களை தடுக்க வேண்டிய காவல்துறையின் நடவடிக்கையோ அதைவிட மோசமாக உள்ளது. காவல்துறையில் உயர் அதிகா ரிகளால் பெண் அதிகாரிகளுக்கும், பெண் காவலர்க ளுக்கும் பாலியல் சீண்டல் நடப்பதை நாடு அறியும். அதேபோல கல்வி நிலையங்களில் தொடரும் பாலியல் சீண்டல் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களால் நடைபெறுகிறது. மாணவிகளிடம்ஆபாச வார்த்தை பேசுவது, இரட்டை அர்த்தத்தில்உரையாடுவது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடந்த வண்ண மாகவே இருந்து வருகிறது. வேலியே பயிரை மேயக் கூடிய கொடூரம் நடக்கிறது. பெண்களை கொச்சைப்படுத்துவது, ஆபாசமாகப் பேசுவது, அவர்களை அநாகரிகமாக, இழிவாக நடத்துவது போன்ற ஆபாச நடவடிக்கைகளை மற்றும் அச்சுறுத்தல்களை கட்டவிழ்த்து விடுகிறது. 

வெட்கித் தலை குனியும் நிலை 

பொதுச் சமூகம், பெண்களின் ஆடைகளைப் பற்றிப் பேசுவது, நடையைப் பற்றிப் பேசுவது, சக நண்பர்களுடன் பழகுவதைக் கூட வித்தியாசமாய்ப் பார்க்கிறது. உலகமே கைகொட்டி சிரிக்கும் நிலை யில் இன்றைக்கு நம் நாடு இருந்து வருகிறது. அதை விட அதிக அளவில் வக்கிரமாகவும், பெண்களுக்கு எதிராகவும் பாலியல் தாக்குதல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதனை தடுக்க கடுமையான சட்டங்களை அமல்படுத்திட வேண்டும். கல்வி நிலையத்தில் அடிப்படையான பாலியல் சமத்துவக் கல்வியை கொண்டு வருவதை இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்துகிறது. பாலியல் வன் கொடுமையின் உச்சக்கட்ட துயரத்தை வெளிப் படுத்தும் விதமாக அண்மையில் தற்கொலை செய்து கொண்ட சென்னை மாங்காடு மாணவி எழுதிய தனது கடிதத்தில் “பெண்களுக்கு பாதுகாப்பான இடம் தாயின் கருவறையும் கல்லறையும் தான்” என்று கூறியிருப்பது இந்த சமூகம் வெட்கித் தலைகுனிவ தோடு மட்டுமல்லாமல் இந்த கொடுமைக்கு முடிவுகட்ட அனைவரும் களம் இறங்கவேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது.

சாதிய, மதப் பாகுபாடு

தீண்டாமை ஒரு பாவச்செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை ஒரு மனித தன்மை யற்றசெயல் என்ற காந்தியாடிகளின் வாசகமானது பள்ளி படிக்கும் முதலே கல்வி நிலையங்களில் பாடப் புத்தகத்தில்  இடம்பெற்று இருக்கிறது. ஆனாலும் கூட இன்றைய நிலையில் மாணவர்கள் மனதில் சாதியப் பாகுபாடு தலைவிரித்தாடுகிறது. மாணவர்க ளிடையே சாதி மத உணர்வை இந்த சமூகம் வடிவ மைத்து காண்பிக்கிறது. அதிக அளவில் மாண வர்களின் மனதில் இந்த உளவியல் பிரச்சனை அவர்கள் வசிக்கும் இடம் மற்றும் சூழ்நிலைகள் அவர்களை தவறாக உருவாக்கி வைத்திருக்கிறது. சில இடங்களில் கல்வி நிலையத்திலேயே அத்தகைய பிரிவினையை உருவாக்குகிறது. சில ஆசிரியர் கள் மற்றும் பேராசிரியர்கள் அதற்கு காரணமாக இருந்து வருகிறார்கள். இதனால் கல்வி நிலை யத்திலேயே மாணவர்களுக்கு இடையில் சாதிய, மத மோதல் என்பது அதிகரித்து வருகிறது. இதனை ஊக்குவிக்கும் வகையில் கல்வி நிலையங்கள் இருக்கின்றன. இதே நிலைமை கல்வி நிலையங்க ளில் தொடருமானால் மாணவர்களுடைய எதிர் காலக் கல்வியும் அவர்களுடைய வாழ்க்கை முறையும் கேள்விக்குறியதாகிவிடும். வரலாற்றை மறந்தவர்கள் செத்த பிணத்திற்கு சமமானவர்கள். நாம் அப்படியல்ல என்றார் புரட்சியாளர் ஹோசிமின். கடந்த கால வரலாற்றை மனதில் கொண்டு நிகழ்கால அரசியல் நிகழ்வுக ளை சீர்தூக்கி எதிர்கால அரசியல் கடமைகளை தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய மக்கள் ஜன நாயக புரட்சி பாதையில் பயணிக்க நாம் தொடர்ந்து முன்னேறுவோம். தோழர்களே வெண்மணி வீரத்தியாகிகள் புகழ் ஓங்கட்டும். 

கட்டுரையாளர் : மாவட்ட செயலாளர், இந்திய மாணவர் சங்கம், திருவாரூர்


 

;