districts

img

நடமாடும் பொதுச்சேவை மைய வாகனம் துவக்கம்

மயிலாடுதுறை, மே 11-

   மயிலாடுதுறை மாவட்டம் பொறை யாரில் பொதுமக்களின் சேவைக்காக சிஎஸ்சி பொதுச் சேவை மைய நடமாடும்  வாகனத்தை பூம்புகார் எம்.எல்.ஏ நிவேதா எம்.முருகன் புதனன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

   மயிலாடுதுறை மாவட்ட சிஎஸ்சி, விஎல்இ நலச் சங்க தலைவர் சம்பத் வர வேற்றார். பொது சேவை மைய மேலாளர் பிரபாகரன், சிஎஸ்சி, விஎல்இ நலச் சங்க பொறுப்பாளர்கள் மணிமாறன், அருண், சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித் தனர்.

   ஒன்றிய அரசின் பொதுச் சேவை மையம், கணினி பயிற்சி வகுப்புகள், மருத்துவக் காப்பீடு திட்டம், இ-சேவைகள்  கிராமங்கள் தோறும் மக்களுக்கு எளிதாக கிடைக்கும் வகையில் சிஎஸ்சி நடமாடும் வாகனத்தை எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.

  நிகழ்ச்சியில், தரங்கம்பாடி பேரூ ராட்சித் தலைவர் சுகுணசங்கரி, திமுக தெற்கு ஒன்றியச் செயலாளர் அப்துல் மாலிக், மயிலாடுதுறை மாவட்ட சிஎஸ்சி விஎல்இ-க்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.