பாபநாசம், டிச.4 - கும்பகோணம் - தஞ்சாவூர் பிரதான சாலை தமிழகத்தின் முக்கியச் சாலைகளுள் ஒன்று. இந்த சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் திருச்சி செல்ல இந்த சாலையைத்தான் பயன்படுத்த வேண்டும். இந்த பிரதான சாலையின் கும்பகோணம் - தஞ்சாவூர் இடையில் தாராசுரம், திருவலஞ்சுழி, சுந்தரப் பெருமாள் கோயில், உத்தாணி, பாபநாசம், ராஜகிரி, பண்டாரவாடை, வழுத்தூர், சக்கராப்பள்ளி, அய்யம் பேட்டை, மாத்தூர் உள்ளிட்ட சில பேரூர்கள், பல சிற்றூர் கள் உள்ளன. இந்த பிரதான சாலை கடந்த மகாமகத்திற்கு முன்னர் போடப்பட்டது. இந்த சாலையை போடும் போதே தரமாக போடாததால் சாலை அடிக்கடி குண்டும் குழியுமா வதும், பேட்ச் ஒர்க் போடுவதுமாகவும் உள்ளது. போடப்ப டும் பேட்ச் ஒர்க்கும் பெயரளவில் போடப்படுவதால், மழை நாட்களில் பெயர்ந்து விடும். மழை முடிந்த பின்னர் மீண்டும் குண்டும், குழியுமான பகுதிகளில் ஜல்லி, மணல் நிரப்பப்படுகிறது. இதனால் புழுதி பறந்து, வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி, விபத்தில் சிக்க நேரிடுகிறது. பிரதான சாலையில் திருவலஞ்சுழி, திருப்பாலைத் துறை, பாபநாசம், ராஜகிரி, பண்டாரவாடை, வழுத்தூர், சக்கராப் பள்ளி, அய்யம்பேட்டை, பசுபதிகோயில் உள்ளிட்ட பகுதிகளில் பிரதான சாலையின் இருபுறமும் கடை வைத்துள்ள வணிகர்கள் சிரமப்படுகின்றனர். இந்த சாலை என்.எச்-ன் கீழ் வருவதால் தஞ்சாவூர் - விக்கிரவாண்டி தேசிய பிரதான சாலை போடப்பட்ட பின்னர்தான் இந்த சாலை போடப்படும் என்கின்றனர். அதுவரை அவதிப்பட வேண்டுமா என்று பொதுமக்க ளும், வணிகர்களும் புலம்புகின்றனர். கும்பகோ ணத்தை அடுத்துள்ள தாராசுரம் தொடங்கி தஞ்சாவூரை அடுத்துள்ள பள்ளியக்கிரகாரம் வரை சாலையை அகலப்படுத்தி தரமாக போட வேண்டும் என்பதே பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.