districts

img

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: கரூர் பரணி வித்யாலயா பள்ளி மாணவர்கள் சாதனை

                            கரூர்,  மே 14-                                                                                                                                              அகில இந்திய அளவில் முடிவுகள் வெளியிடப்பட்ட  சி.பி.எஸ்.இ 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் கரூர் பரணி வித்யாலயா பள்ளி மாணவர்,மாணவியர்கள் சாதனை படைத்துள்ளனர். பள்ளி மாணவிகள் அக்‌ஷயா  494 மதிப்பெண்கள், ரிதன்யா- 494 மதிப்பெண்கள், மாணவர் ஹரீஷ்குமார் 493  மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில்  சாதனை படைத்துள்ளனர். மேலும் 490 மதிப்பெண்ணுக்கு மேல் 3 பேர், 480 மதிப்பெண்ணுக்கு மேல் 8 பேர், 470 மதிப்பெண்ணுக்கு மேல் 21 பேர், 450 மதிப்பெண்ணுக்கு மேல் 49 பேர்  பெற்று  சாதித்துள்ளனர். வேதியியலில் 2 மாணவர்களும், தமிழில் 5 மாணவர்களும், கணினி அறிவியலில் 7 மாணவர்களும் மொத்தம் 14 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.  சி.பி.எஸ்.இ 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் ரிதுஸ்ரேயா- 484, ஹரிணி- 481, ஆதித்யா- 479 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். ஜே.இ.இ மெயின் தேர்வில் பரணி மாணவர் ஹரிஸ்குமார் 99.9 சதவீதம் பெற்று தேசிய அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளார். 14.5 லட்சம் மாணவர்கள் பங்கு பெற்ற ஜே.இ.இ. மெயின் தேர்வில் பரணி பார்க் கல்வி நிறுவனத்தின் மாணவர்கள் 36 பேர் தேர்வு பெற்று இந்திய அரசால் நடத்தப்படும்  தலைசிறந்த என்.ஐ.டி(NIT) கல்லூரிகளில் சேர தகுதி பெற்றுள்ளனர். 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் கரூர் பரணி வித்யாலயா பள்ளியின் சராசரி மதிப்பெண் 411 என்பது குறிப்பிடத்தக்கது.  12, 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்துள்ள மாணவர், மாணவியர்களுக்கும் அவர்களின் சாதனைக்கு உறுதுணையாக இருந்த பரணி கல்விக்குழுமத்தின் முதன்மை முதல்வர் முனைவர் சி.ராமசுப்ரமணியன், முதல்வர் எஸ்.சுதாதேவி, துணை முதல்வர் ஆர்.பிரியா, ஒருங்கிணைப்பாளர் சி.ஜெர்லின் கிரிஸ்டல், இருபால் ஆசிரியர்களுக்கும் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு பரணிபார்க் கல்விக்குழுமத்தின் தாளாளர் எஸ்.மோகனரெங்கன் தலைமை வகித்தார். செயலர் பத்மாவதி மோகனரெங்கன், அறங்காவலர் சுபாஷினி அசோக்சங்கர்  மற்றும் பள்ளியின் முதன்மை முதல்வர் முனைவர் சி.ராமசுப்ரமணியன், ஆகியோர்  பரிசுகள் வழங்கி,பாராட்டிப் பேசினர்.