districts

img

கன்னியாகுமரி நடைபயணக் குழு திருச்சியை வந்தடைந்தது

திருச்சிராப்பள்ளி, மே 28-

    14 அம்சக் கோரிக்கைகளை  வலியுறுத்தி கோயம்புத்தூரி லிருந்து சிஐடியு மாநிலச் செய லாளர் கே.சி.கோபிகுமார் மாநிலச்செயலாளர் கிருஷ்ண மூர்த்தி தலைமையிலான நடைபயணக்குழு திருச்சிராப் பள்ளியை வந்தடைந்தது.  நடை பயணக் குழுவினரை  மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மணச்ச நல்லூர் கிழக்கு ஒன்றியச் செய லாளர் கனகராஜ், புள்ளம்பாடி ஒன்றியச் செயலாளர் ரஜினி காந்த், லால்குடி ஒன்றியச் செயலா ளர் பாலமுருகன் ஆகியோர் தலை மையில் வரவேற்பளிக்கப்பட்டது.

    கொள்ளிடம் நம்பர் 1- டோல்கேட் பகுதியில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் புறநகர் மாவட்டச் செயலாளர் சிவராஜ், நிர்வாகிகள் பன்னீர்செல்வம், சம்பத், அங்கன்வாடி மாநிலச் செயலாளர் டெய்சி தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலா ளர் நடராஜன் உட்பட ஏராளமா னோர் பங்கேற்றனர.

    சமயபுரத்தில் நடைபெற்ற வர வேற்பு நிகழ்வில் மாநிலச் செயலா ளர் குமார்,  மாவட்டத் தலைவர் சம்பத், மாவட்டப் பொருளாளர் பன்னீர்செல்வம்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர்  மாவட்டச் செயலாளர் ஜெயசீலன்,  ஒன்றியச் செயலாளர்  கனகராஜ்,  மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பழநிசாமி மற்றும்  ஆட்டோ, கட்டுமானம், வாலிபர், மாதர், அரசு ஊழியர் சங்கத்தினர் ஏராள மானோர் பங்கேற்றனர்.

   புதுக்கோட்டை

     களியக்காவிளையிலிருந்து புறப்பட்ட நடைபெற்ற புதுக் கோட்டை மாவட்டம் அறந்தாங் கியை வந்தடைந்தது. சிஐடியு  மாநிலத் துணைப் பொதுச்செய லாளர் பி, குமார், மாநிலச் செய லாளர்கள் கே.தங்கமோகன், எம்.சிவாஜி, எஸ்.தேவமணி, ஆர். ரசல்  மாநிலத் துணைத் தலைவர் பி. சிங்காரன், புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், மார்க் கண்ணு, வி.மானிக்கம்.  மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர். தென்றல் கருப்பையா, கே.தங்கராஜ், நாராயணமூர்த்தி. பாண்டி கெள தம், ராசு, ஜான். சந்தானம் ஏராள மானோர் பங்கேற்ற நடைபயணத் திற்கு அறந்தாங்கி பேருந்து நிலையம், கட்டுமாவடிசாலை      முக்கம், காரைக்குடி-புதுக் கோட்டை சாலை செக்போஸ்ட் முக்கம் ஆகிய இடங்களில் வர வேற்பளிக்கப்பட்டது.

     புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்திற்கு   மாவட்டத் துணைச்செயலாளர் கு.நடராஜன் தலைமை வகித்தார். ஆர்.கருணா வரவேற்றுப் பேசினார். கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை சிறப்பு ரையாற்றினார். முன்னதாக கலைச்சுடர்மணி மதுரை ராமர் குழுவினரின் கலை நிகழ்வுகள் நடைபெற்றது.

 அரியலூர்

    கடலூரில் புறப்பட்ட நடை பயணக் குழு ஞாயிறன்று ஜெயங் கொண்டம் வந்தடைந்தது. ஜெயங் கொண்டத்தில் கை நெசவு தொழி லாளர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.என்.துரைராஜ் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. நடைபயணத்தை  மாவட்டச் செய லாளர் எம்.இளங்கோவன் தொடங்கி வைத்தார். வீரமணி, நீலமேகம், கோவிந்தராஜ், சேப் பெருமாள், பி ஆர்.தனவேல், பல்கீஸ், ஜி.பெரியசாமி, பால சுப்பிரமணியன், எஸ்.மீனா, மணி யம்மாள், ராஜா, அமுதா உட்பட  ஏராளமானோர் பயணக்குழுவின ரோடு இணைந்து கொண்டனர்.

    நடைபயணத்தின் நோக்கங் களை விளக்கி சிஐடியு மாநிலத் துணைப் பொதுசெயலாளர் ஜி. திருச்செல்வன், மாநிலச் செயலா ளர் ஜெயபால், சிஐடியு மாவட்டச்  செயலாளர் பி.துரைசாமி, மாவட்டத் தலைவர் கே.கிருஷ் ணன், வீரப்பன், சிற்றம்பலம்  கண் ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் இர. மணிவேல் மாவட்டத் தலைவர் ஆர்.செந்தில்வேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச்  செயலாளார்கள் எம்.வெங்கடா சலம், கு.அர்ச்சுனன் ஜெ.ராதா கிருஷ்ணன், ப.பரமசிவம்,  மாதர் சங்க மாவட்டத் தலைவர்  பத்மாவதி, மாவட்டச் செயலாளர்   அம்பிகா, விவசாயத் தொழிலாளர் கள் சங்க மாவட்டச் செயலாளர் கந்தசாமி, மீனா, தியாகராஜன் ஆகியோர் பேசினார்.  

    உடையார்பாளையத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் நடை பயணக்குழுவை வரவேற்றனர்.