திருச்சிராப்பள்ளி, ஜூலை 16 -
திருச்சி கேர் பொறியியல் கல்லூரியில் ஜூலை 27 முதல் 29 வரை வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் மாபெரும் வேளாண்மை சங்கமம் 2023, வேளாண்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்கை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
இதனை முன்னிட்டு விழா மேடை மற்றும் கண்காட்சி அரங்குகள் அமைப்பதற்கான முன்னேற்பாடு பணிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் ஞாயிறன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர், திருச்சி கேர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் இச்சங்கமத்தை சிறப்பாக நடத்திடும் வகையில் அரசுத்துறை உயர் அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.