இங்கிலாந்து நாட்டின், கேம்பர்லி நகரில், முல்லைப் பெரியாறு அணையை உருவாக்கி தென் தமிழ்நாட்டின் நீர் வளத்திற்கு வித்திட்ட கர்னல் ஜான் பென்னிகுயிக் அவர்களுக்கு உருவச் சிலை நிறுவப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததை தொடர்ந்து, செப்டம்பர் 10 அன்று தமிழ்நாடு அரசின் சார்பில் நிறுவப்பட்டுள்ள கர்னல் ஜான் பென்னிகுயிக் சிலையை, தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் இ.பெரியசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் கம்பம் ராமகிருஷ்ணன், .கோ.தளபதி, மகாராஜன், செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், மற்றும் கேம்பர்லி தமிழ் பிரிட்டிஷ் சங்க நிர்வாகிகள் ஆகியோர் பார்வையிட்டனர்.