districts

img

ஜல்லிக்கட்டில் மாடு முட்டி இறந்தவரின் வாரிசுக்கு நிதியுதவி

புதுக்கோட்டை, ஜூலை 3-

     ஜல்லிக்கட்டில் மாடு முட்டி இறந்தவ ரின் வாரிசுக்கு புதுக்கோட்டை மாவட்ட  ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா திங்கள் கிழமை நிதியுதவி வழங்கினார்.

     புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் திங்கள்  கிழமை நடைபெற்றது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக் கள் கொடுத்த 294 மனுக்களின் மீது தகுந்த  நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவ லர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். 23 பயனாளிகளுக்கு ரூ.3,44,000 மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

     மேலும், ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி இறந்த குளத்தூர் தாலுகா, கண் ணக்கோன்பட்டியைச் சேர்ந்த அரவிந்த் (எ) சிவக்குமார் மற்றும் திருமயம் தாலுகா,  கே.புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த சுப்பிர மணியன் ஆகியோரின் வாரிசுகளுக்கு முத லமைச்சரின் பொது நிவாரண நிதியிலி ருந்து தலா ரூ.3 லட்சம் வீதம் ரூ.6 லட் சத்திற்கான காசோலைகளை ஆட்சியர் வழங்கினார்.