districts

மேரீஸ் கார்னர் மேம்பாலம் கட்டியதில் முறைகேடு நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் உள்பட 4 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

தஞ்சாவூர், ஜூலை 9-  

      மேம்பாலம் கட்டியதில் ஏற்பட்ட  முறைகேடு தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு காவ‌ல்துறை‌யின‌ர், நெடுஞ் சாலைத்துறை பொறியாளர்கள் உள்பட நான்கு பேர் மீது நீதி மன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

     தஞ்சாவூர் மேரீஸ் கார்னர் முதல்  வண்டிக்காரத்தெரு வரை கடந்த அதிமுக ஆட்சியில், மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டது. இதன் பணி கள் தரமாக இல்லை, சரியான திட்ட மிடலுடன் கட்டப்படவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தன.

   மேலும், நாஞ்சிக்கோட்டை சாலையிலிருந்து பழைய பேருந்து  நிலையத்துக்கு வாகனங்கள் செல்ல முடியாத வகையில் சாலை  தடுக்கப்பட்டது. புதிய பேருந்து நிலையத்துக்கு செல்லும் வாகனங் களால், அந்த பகுதியில் பெரும்  போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  பாலம் கட்டிய போதே பாலத் தில் லேசான விரிசலும் ஏற்பட்டது.  அப்போது எதிர்க்கட்சித் தலை வராக இருந்த மு.க.ஸ்டாலின், பாலத்தில் ஏற்பட்ட விரிசலை நேரில் பார்வையிட்டு, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் உரிய நட வடிக்கை எடுக்கப்படும் என கூறி யிருந்தார்.

    இதற்கிடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலத்தை விரிவுபடுத்துவதற்காக அமைச்சர் மற்றும் அதிகாரிகளால் ஆய்வு நடத்தப்பட்டது. இந்நிலையில், பாலம் கட்டுமான பணிகளை திருச்சியை சேர்ந்த தேவேந்திரன் (55) என்பவர் ஒப்பந்தம் எடுத்து செய்தார்.

   அப்போது தஞ்சாவூர் நெடுஞ் சாலைத் துறையில் பணியாற்றிய கோட்ட பொறியாளர் கந்தசாமி  (57), உதவி கோட்ட பொறியாளர்  இந்திராகாந்தி (50), உதவி பொறி யாளர் இந்துமதி (50) உள்ளிட்ட அதிகாரிகள், ஒப்பந்தக்காரரான தேவேந்திரனுக்கு ஆதரவாக பாலத்தின் கீழ்ப் பகுதியில் சில வேலைகளைச் செய்யாமலேயே, செய்ததாகக் கணக்கு காட்டியும், பாலத்தின் அளவைக் குறைத்து தர மில்லாமல் கட்டியும் போலியாக பில் தயாரித்து முறைகேடு செய்துள் ளனர்.

    இதுகுறித்து ஆய்வின் போது தெரியவந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன் படி, லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் கடந்த 2022 ஆம் ஆண்டு  ஜன.19 ஆம் தேதி வழக்குப் பதிவு  செய்தனர்.

    தொடர் விசாரணையில், ரூ.28 லட்சம் அரசுக்கு இழப்பு ஏற்படும் வகையில் முறைகேடு செய்ததாக, பொறியாளர்கள் கந்தசாமி, இந்திரா காந்தி, இந்துமதி, ஒப்பந் ததாரர் தேவேந்திரன் உள்ளிட்ட  நான்கு பேர் மீது, கும்பகோணம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு காவ‌ல்துறை‌யின‌ரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப் பட்டுள்ளது.

;