districts

அக்.21-24 பண்டிகை நாட்களுக்காக 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகம் (கும்ப) லிட் கும்பகோணம் சார்பில், அக்டோபர் 21, 22 (வார விடு முறை), அக்.23, 24 (ஆயுத பூஜை, விஜயதசமி) என  தொடர் விடுமுறை வருவதை யொட்டி, பொதுமக்கள் வசதிக்காக சிறப்பு பேருந்து கள் இயக்கப்பட உள்ளன.

இதுகுறித்து போக்கு வரத்து துறை கும்பகோணம் தலைமையக மேலாண் இயக் குநர் ஆர்.மோகன் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, வேதா ரண்யம், திருத்துறைப் பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊர்களிலிருந்து சென்னைக்கும், சென்னையி லிருந்து திருச்சி, கும்பகோ ணம், தஞ்சாவூர், பட்டுக் கோட்டை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருவா ரூர், மயிலாடுதுறை, வேதா ரண்யம், திருத்துறைப் பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊர்களுக்கும் 300 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

திருச்சியிலிருந்து கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய இடங்க ளுக்கும், கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய  இடங்களிலிருந்து திருச்சிக் கும், திருச்சியிலிருந்து காரைக்குடி, புதுக் கோட்டை, தஞ்சாவூர், நாகப் பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கும் 200 பேருந்துகள் என வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்க ளில் மொத்தம் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

அதேபோன்று மேற்படி விடுமுறைக்கு வந்த பய ணிகள், மீண்டும் அவரவர் ஊர்களுக்கு திரும்ப, அக்.24 (செவ்வாய்), அக்.25 (புதன்) ஆகிய நாட்களில் சென்னை தடத்தில் 300 சிறப்பு பேருந்துகளும், பிறத்  தடங்களில் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விடுமுறை முடிந்து பய ணிகள் திரும்ப அக்.24,25  தேதிகளில் திருச்சியி லிருந்து சென்னைக்கு நள்ளிரவு 1 மணி வரையி லும், பெரம்பலூர், ஜெயங் கொண்டம், அரியலூரி லிருந்து சென்னைக்கு நள்ளி ரவு 12 மணி வரையிலும், புதுக்கோட்டை, நாகப்பட்டி னம், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருவாரூர், மயிலாடுதுறை, வேளாங் கண்ணி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை ஆகிய இடங்களிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 12 மணி வரையிலும், காரைக் குடி, சிவகங்கை ஆகிய இடங் களிலிருந்து சென்னைக்கு இரவு 10 மணி வரையிலும், இராமநாதபுரத்திலிருந்து சென்னைக்கு இரவு 9:30  மணி வரையிலும், பயணி கள் பயன்பாட்டிற்கு ஏற்ப  சிறப்பு பேருந்துகள் இயக்க  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர் விடுமுறை காரணமாக பயணிகள் முன் பதிவு செய்து பயணிக்க  கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள். முன்பதிவு செய் யும் பயணிகளின் எண்ணிக் கைக்கு ஏற்ப கூடுதலாக பேருந்துகளை இயக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அனைத்து போக்குவ ரத்துக் கழகங்களிலும் முக்கிய நகரங்களுக் கிடையே இயக்கப்படும் பேருந்துகளுக்கு முன் பதிவு சேவை விரிவுபடுத் தப்பட்டுள்ளது. எனவே, பய ணிகள் www.tnstc.in என்ற இணைய முகவரி மூலம் முன்பதிவு செய்யலாம். மேலும் மொபைல் ஆப் மூலமாகவும் முன்பதிவு செய்யலாம்.

பயணிகள் வசதிக்காக,  முக்கிய பேருந்து நிலை யங்களில் சிறப்பு அலுவலர் கள், பரிசோதகர்கள், பணி யாளர்கள், பணியமர்த்தப் பட்டு பேருந்து இயக்கத்தை சீரமைக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. எனவே இப் பேருந்து வசதியை பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.  இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.