districts

img

நீரேற்று, நீர் உந்து நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு

மயிலாடுதுறை,  ஏப்.25 -  மயிலாடுதுறை மாவட் டம் கொள்ளிடம் வட்டாரத் திற்குட்பட்ட 114 கடலோர குடியிருப்புகளுக்கான கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின், வடரங்கம் கிராமத்தில் இயங்கி வரும் நீரேற்று நிலையம் மற்றும் பழைய பாளையத்தில் இயங்கி வரும் கூட்டு குடிநீர்  திட்டத்தின் நீர் உந்து நிலை யத்தை ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகா பாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். வடரங்கம் கிராமத்தில் உள்ள நீரேற்று நிலையத் தின் வழியாக 25.00 குதிரை  திறன் கொண்ட மின் மோட் டார்கள் மூலம் நீரேற்றப் பட்டு, பழைய பாளையத்தில் அமைந்துள்ள நீர் உந்து  நிலையத்தில் நீர் சேகரிக்கப் படுகிறது. பின்னர், அங்கி ருந்து மாதானம், பழையாறு, திருமுல்லைவாசல், மகேந்திரப்பள்ளி ஆகிய 4  கிராமங்களில் உள்ள 114 குடி யிருப்புகளில் அமைந் துள்ள மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகள் மூலம் நாளொன்றுக்கு நபர் ஒருவ ருக்கு 40 லிட்டர் அளவில் குடி நீர் வழங்கப்பட்டு வரு கிறது. மேலும், இக்கூட்டுக் குடி நீர் திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு 5.37 மில்லி யன் லிட்டர் குடிநீர் கொள்ளி டம் ஒன்றியத்தில் உள்ள 144 குடியிருப்புகளைச் சேர்ந்த 77,732 மக்கள் பயன் பெறும் வகையில் குடிநீர் வழங்கப்படுகிறது. ஆய்வின்போது, கூடுதல்  ஆட்சியர் மு.ஷபீர் ஆலம், இயக்குநர் (ஊராட்சிகள்) சந்தானம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் உதவி செயற்பொறியாளர் விஜயராகவன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உமா சங்கர், தியாகராஜன் ஆகி யோர் உடனிருந்தனர்.