districts

img

சாலைப் பணியாளர்களின் முதுநிலை பட்டியலை சரியாக வெளியிட வலியுறுத்தல்

பெரம்பலூர், மே 19 - தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்கத்தின் பெரம்பலூர்  கோட்ட சிறப்பு பொதுக்குழு கூட்டம் மே 17  அன்று நடைபெற்றது.  பெரம்பலூர் லட்சுமி மருத்துவமனை கூட்டரங்கில் நடந்த இந்த கூட்டத்திற்கு சங்கத்தின் கோட்ட தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் பழனிசாமி தொடக்க உரையாற்றினார். தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் குமரி அனந்தன், கூட்டுறவுத் துறை  ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் விஸ்வநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சாலைப் பணியாளர்களின் கோரிக்கை களை கோட்டச் செயலாளர் சுப்ரமணியன் விளக்கிப் பேசினார். மாநில துணைத் தலை வர் மகேந்திரன் சிறப்புரையாற்றினார். மாநில  பொதுச் செயலாளர் அம்சராஜ் நிறைவுரை யாற்றினார்.  3,500-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் ஒழிக்கப்படும். கிராமப்புற இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்படும் வகையில்  மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும்  முடிவையும், நெடுஞ்சாலைத்துறை மறுசீர மைப்பு நடவடிக்கையும் தமிழக அரசு கை விட வேண்டும். இந்த கோரிக்கைகளை வலி யுறுத்தி ஜூன் 10 அன்று அனைத்து நெடுஞ் சாலைத்துறை கோட்ட அலுவலகங்கள் முன்பு கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டமும், ஜூன் 19 அன்று நெடுஞ்சாலைத் துறை  கண்காணிப்பு பொறியாளர் அலுவலகங்கள் முன்பு தண்டோரா முழக்க போராட்டமும் நடைபெறும்.  சாலை பணியாளர்களின் 41 மாத பணி  நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப் படுத்த வேண்டும். சாலை பணியாளர்களில், தொழில்நுட்ப கல்வித்திறன் பெறாத ஊழி யர்களுக்குரிய ஊதிய மாற்றம், தர ஊதி யத்தை வழங்க வேண்டும். சாலை பணியா ளர்களுக்கு ஒட்டுமொத்த முதுநிலை பட்டி யலை கடந்த 15 ஆண்டு காலமாக முறை கேட்டுடன் வெளியிட்டு, முறைகேடாக பதவி உயர்வு வழங்கும் நடைமுறைக்கு காரண மான சென்னை நெடுஞ்சாலைத்துறை நிர்வா கத்தின் முதன்மை இயக்குநர் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும். சாலைப் பணியாளர்களின் முதுநிலை பட்டியல், தமிழ்நாடு சார்நிலை பணிய மைப்பு சட்டத்தின் அடிப்படையில் முறைப் படுத்தி வெளியிட அனைத்து கோட்ட பொறி யாளர்களுக்கும் ஆணை வழங்க வேண்டும்  என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  முன்னதாக கோட்ட இணைச் செயலா ளர் காட்டு ராஜா வரவேற்றார். கோட்ட பொரு ளாளர் சுப்ரமணியன் நன்றி கூறினார்.

;