districts

ஒழுங்குமுறை விற்ப னைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது

பாபநாசம், ஜூலை 23-

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒழுங்குமுறை விற்ப னைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. ஏலத்தில் பாபநாசம் மற்றும் இதைச் சுற்றியுள்ள கிரா மங்கள், பூந்தோட்டம், எரவாஞ்சேரி, இடங்கண்ணி உள்  ளிட்டப் பகுதிகளில் இருந்து 2129 விவசாயிகள், 3076  குவிண்டால் பருத்தியை எடுத்து வந்தனர். கும்பகோணம், பண்ருட்டி, விழுப்புரம், ஆந்திரா, தேனி, ஆக்கூர் முக்கூட்டு உள்ளிட்ட பகுதிகளை சார்ந்த 16 வணிகர்கள் ஏலத்தில் கலந்து கொண்டனர். இதில், அதிகபட்சம் குவிண்டா லுக்கு ரூ.6799, குறைந்தபட்சம் ரூ.6209, சராசரி ரூ.6486 என விலை நிர்ணயம் செய்தனர்.