அரியலூர் மாவட்டம் தா.பழுர் ஒன்றியத்திற்குட்பட்ட கூத்தங்குடி கிராமத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கிளை அமைப்பு கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் கொடியை மாவட்டத் தலைவர் ரவீந்திரன் ஏற்றி வைத்தார். மாவட்டச் செயலாளர் துரை.அருணன், மாவட்ட துணைச் செயலாளர் அருணாச்சலம், மாவட்ட துணைத் தலைவர் சிலம்பரசன், கிளைத் தலைவர் விக்னேஷ்வரன், செயலாளர் பாலகிருஷ்ணன், பொருளாளர் முகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.