districts

img

சீனிவாசன் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மருத்துவ படிப்பு தொடக்க விழா

திருச்சிராப்பள்ளி, டிச.16 - திருச்சி சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகத்தில் இயங்கும் சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மருத்துவ படிப்பிற்கான முத லாம் ஆண்டு தொடக்க விழா வியாழக்கிழமை பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்றது. சீனிவாசன் மருத்துவக்  கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் டாக்டர் துளசி  வரவேற்றார். பல்கலை. வேந்தர் சீனிவாசன் தலைமை உரையாற்றினார். மாணவர் நலன் மற்றும் உடற்கூறியல் துறை தலைவர்  ரவிச்சந்திரன் புதிதாக பதிவு செய்யப்பட்ட மருத்துவ மாணவர்களை ஹிப்போகிரடிக் உறுதிமொழி ஏற்கச் செய் தார். நிகழ்ச்சியில் தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமத் தின் செயலாளர் நீலராஜ், பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் ரவிச்சந்திரன்,  முதல்வர்கள், பேராசிரியர்கள், பெற் றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.