districts

img

நவக்கிரக கோவில்களுக்கு சிறப்பு சுற்றுலா பேருந்து

கும்பகோணம், பிப்.24-  கும்பகோணம் தமிழ்நாடு  அரசு போக்குவரத்து கழகம்  சார்பில் நவக்கிரக கோவில் களுக்கு சிறப்பு சுற்றுலா பேருந்து இயக்கத்தினை, தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணம் பேருந்து நிலையத் திலிருந்து  போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் சனிக்கிழமை துவக்கி வைத்தார். தொடர்ந்து போக்கு வரத்துத் துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரி வித்ததாவது: தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகம் கும்பகோ ணம் மண்டலம் சார்பில்  ஒவ்வொரு வாரமும் சனி  மற்றும் ஞாயிற்றுக்கிழமை களில் நவக்கிரக கோவில் களுக்கு ஆன்மீக சுற்றுலா  செல்லும் வகையில் சிறப்பு  ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. குறைந்த கட்டணமாக ரூ.750/- செலுத்தி இணைய தளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த திட்டம் மக்களி டத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இணைய தளத்தில் இரண்டு நாட் களுக்கு முன் அறிவிக்கப் பட்ட நிலையில், பிப்.24, 25 (சனி, ஞாயிறு) தேதிகளில் மட்டுமல்லாது இந்த மாதம் முழுவதும் முன்பதிவு செய் யப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யும் எண்ணிக்கையை பொறுத்து படிப்படியாக இத்திட்டம் விரிவு படுத்தப்படும். அரசு கொண்டு வந்த இத் திட்டத்தை மக்கள் மிகுந்த ஆர்வத்தோடு வரவேற்பது, மகிழ்ச்சியை தருகிறது. ஏற்க னவே ஊட்டி மற்றும் கொடைக் கானலுக்கு சுற்றுலா பயணி கள் சென்றுவரும் வகையில் பேருந்து இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. அறு படை வீடுகளுக்கும் பொது மக்கள் சென்று வரும் வகை யில், முன்பதிவு செய்ப வர்களின் எண்ணிக்கையை பொறுத்து, ஆன்மீக சுற்றுலா  செல்வதற்கு சிறப்பு பேருந்து இயக்குவதற்கான திட்டம் குறித்து ஆலோசிக் கப்பட்டு வருகிறது. அரசுப் பள்ளிகளில் படித்த மாணவியர்கள் உயர்கல்வி படிப்பதற்கு புது மைப் பெண் திட்டத்தின்கீழ் மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை தொடர்ந்து, பள்ளி-கல்லூரிகளில் மாண வியர்களின் சேர்க்கை 35 சத வீதம் வரை அதிகரித்துள் ளது. எனவே தேவையான இடங்களில் பள்ளி, கல்லூரி  மாணவ, மாணவியர் களுக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல்  பேருந்துகள் இயக்கப்படும். இந்த ஆண்டு முதல் உயர்கல்வி பயிலும் மாண வர்களுக்கும் மாதம் ரூ. 1000/- வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளதால், கல்லூ ரிகளில் சேர்க்கை அதிகரிக் கப்படும். மேலும், தேவை யான இடங்களில் பேருந்து  வசதிகளும் அதிகரிக்கப் படும்.  இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். தமிழக அரசு தலைமை கொறடா கோவி.செழியன்,  நாடாளுமன்ற உறுப்பி னர்கள் சு.கல்யாணசுந்தரம், செ.ராமலிங்கம், கும்பகோ ணம் சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன், துணை மேயர் சு.ப.தமிழழகன், வரு வாய் கோட்டாட்சியர் பூர் ணிமா, வட்டார போக்கு வரத்து அலுவலர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.