districts

திருச்சி முக்கிய செய்திகள்

இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தஞ்சாவூர், அக்.17-

பட்டுக்கோட்டையில் அக்.18 அன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம்,  அக்.19 அன்று மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் நடைபெற வுள்ளது என வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அக்பர் அலி  வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட் சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் தலைமையில் பட்டுக்கோட்டை, பேராவூரணி வட்டங்களை உள்ளடக்கிய மாதாந்திர விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் அக்.18 (புதன்கிழமை) அன்று மாலை 4 மணியள வில் நடைபெற உள்ளது. 

இக்கூட்டத்தில் பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி வட்டத்திற் குட்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை கூறி  பயன்பெற வேண்டும்.

அதேபோல் அக்.19 (வியாழக்கிழமை) காலை 11 மணியளவில் பட்டுக் கோட்டை கோட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி வட்டத்திற்குட்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை தெரி வித்து பயன்பெற வேண்டும்” என கூறப்பட்டுள்ளது. 

எம்ஆர்எப் டயர் தொழிற்சாலை  தொழிலாளர்களுக்கு சிஐடியு ஆதரவு

பெரம்பலூர், அக்.17 -

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே  உள்ள நாரணாமங்கலம் கிராமத்தில் செயல்பட்டு வருகிறது எம்ஆர்எப் டயர் தொழிற்சாலை. இங்கு பணியாற்றும் தொழிலாளர்களில் 5 பேரை  தொழிற்சாலை நிர்வாகம் திடீரென பணி நீக்கம் செய்ததோடு 15பேரை  பணி நீக்கம் செய்வதற்கு நோட்டீஸ் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது

இந்நிலையில் அக்.16 அன்று காலை பணிக்கு வந்த தொழி லாளர்கள், தொழிற்சாலைக்குள் செல்லாமல் பணிநீக்கம் செய்யப் பட்டதை கண்டித்து, பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென வலியு றுத்தினர். மேலும், ஆலையில் செயல்படும் கேண்டீனில் தரமான உணவு வழங்க வேண்டும். பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலா ளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி தொழிற் சாலை முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்..

போராட்டத்திற்கு இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) பெரம்பலூர் மாவட்டக் குழு ஆதரவு தெரிவித்து செவ்வாயன்று, பெரம்ப லூர் புதிய பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதற்கு, சிஐடியு பெரம்பலூர் மாவட்டத் தலைவர் எஸ்.அகஸ்டின் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ரெங்கநாதன், சிபிஎம் மாவட்டச்  செயலாளர் பி.ரமேஷ், சாலையோர வியாபாரிகள் சங்கம் பி.ரெங்க ராஜ் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

வழிகாட்டி ஆசிரியர்களுக்கு ஒருநாள் பயிற்சி வகுப்பு

மயிலாடுதுறை, அக்.17 -

பள்ளிக் கல்வித்துறை சார்பில் பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் பள்ளி தலைமை மற்றும் வழிகாட்டி ஆசிரியர்களுக்கான ஒருநாள் பயிற்சி வகுப்பு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் செவ்வா யன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி வகுப்பை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில், முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி, மாவட்ட கல்வி அலுவலர் ஞானசங்கர், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக
உதவியாளர்கள் பரமசிவம், முத்துக்கணியன், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் பிரபு, வழிகாட்டி ஆசிரியர் அன்பரசன் மற்றும் பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

மாணவர்களுக்கு கண் பரிசோதனை

பாபநாசம், அக்.17 -

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கோபுராஜபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பாபநாசம் லயன்ஸ் கிளப் சார்பில் கண்  பரிசோதனை முகாம் நடந்தது. அய்யம்பேட்டை எலைட் ஆப்டிகல்ஸ் கண் பரிசோதகர்கள் சிராஜுதின், நிஷா ஆகியோர் 228 மாண வர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டனர். கண்ணில் குறைபாடு உடைய 13 பேரை கண்ணாடி அணிய பரிந்துரைத்தனர். 

இதேபோன்று பாபநாசத்தை அடுத்த ராஜகிரி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி கிழக்கு, மேற்கில் 40 மாணவர்களுக்கு பரிசோ தனை மேற்கொள்ளப் பட்டது. இதில் லயன்ஸ் கிளப் தலைவர் ராஜா முகமது, செயலர் ஜெகதீசன், பொருளாளர் ஜோதி, மாவட்டத் தலை வர்கள், பள்ளித் தலைமையாசிரியர் சுரேந்திரநாத், உதவித் தலைமை யாசிரியை உமா மகேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்