புதுக்கோட்டை, ஜூலை 15-
சுங்கச்சாவடிக் கட்டணங்களை ரத்து செய்தால் தக்காளி விலையை சற்றே குறை யும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரம ராஜா கூறியுள்ளார்.
புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டியில், “கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மழை பெய்வதால் தக்காளி வரத்து குறைந்திருக் கிறது. உடனடியாக தக்காளியின் விலையை சற்றே குறைக்க, வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு சுங்கச்சாவடிக் கட்ட ணங்களில் இருந்து விலக்கு அளிக்கலாம்.
ஓசூர் போன்ற பகுதிகளில் தக்காளி அதிகம் விளைகிறது. வேளாண் துறை சார்பில் நல்ல விளைச்சல் இருக்கும் காலங்க ளில் தக்காளியைக் கொள்முதல் செய்து, தக்காளி பவுடர் தயாரித்து, தட்டுப்பாடு ஏற்படும் காலங்களில் விற்பனை செய்ய நட வடிக்கை எடுக்கலாம்.
ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமாக ஜிஎஸ்டி வருவாய் இருக்கும்பட்சத்தில், ஜிஎஸ்டி கட்டணங்களைக் குறைப்பதாக முன்பு ஒன்றிய அரசு சார்பில் கூறப்பட்டது. இப்போது ஜிஎஸ்டி வருவாய் ஒரு லட்சம் கோடியைத் தாண்டிவிட்டது. ஜிஎஸ்டி வரியை குறைத்துக் கொடுத்தால், வரி ஏய்ப்பின்றி அதனை முழுமையாகக் கட்டு வதற்கு வணிகர்கள் தயாராக இருக் கிறோம்.
வணிகர்களையும் அமலாக்கத் துறை யின் விசாரணைக்கு உட்படுத்தும் வகை யில், நடைபெறவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்போவதாக கூறுகிறார்கள். இது தவறான நடைமுறை. உள்ளூர் வணிகத்தைப் பாது காப்போம் என்றுதான் எல்லா அரசுகளும் சொல்கின்றன. அதேநேரத்தில் வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுக்கிறார்கள். ஒரு கார்ப்பரேட் வணிக நிறுவனம் தொடங்கப்பட்டால், ஆயிரம் சிறு வணிகர்கள் கடையைப் பூட்டிவிட வேண்டிய நிலைமை வரும்” என்றார்.