districts

img

கீரனூர்-மணவெளி பகுதியில் இல்லம் தேடிக்கல்வி திட்டம் தொடக்கம்

கும்பகோணம், டிச. 2- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆரியச்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,  கீரனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆகியவற்றிற்கு  உட்பட்ட கீரனூர்-மணவெளி பகுதியில் இல்லம் தேடிக்கல்வி திட்ட தொடக்கவிழா நடை பெற்றது.  விழாவிற்கு கீரனூர் பள்ளி தலைமையாசிரியர்  ப.காளி தாசன் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எஸ்.மாதவன், உறுப்பினர்  ஜி-சந்திரசேகர், எஸ்.எம்சி .  உறுப்பினர் கே.தமிழ்வானன் ஆசிரியர் வி.ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆரியச்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை யாசிரியர்  ந.மேகலா திட்டத்தின் நோக்கம் குறித்துப் பேசினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் க.பாரதிராஜா, மா.கலைச்செல்வன், இரா.ஸ்ரீதர், சுரேஷ்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.