அறந்தாங்கி, ஜூலை 17-
தற்போதைய நவீன தொழில்நுட்ப காலத்தில் அதிகரித்து வரும் வாகனங்க ளின் புகையினால் காற்று மாசுபடுவதை தடுக்கும் நோக்கத்தோடு, புதுக் கோட்டை மாவட்டம் அறந் தாங்கி அரசினர் பல்வகை தொழில்நுட்பக் கல்லூரியில் 2011- 2014 ஆண்டு பயின்ற அமைப்பியல் துறை மாண வர்கள், கல்லூரி வளாகத் தில் மூலிகை தோட்டம் அமைத்தனர்.
கல்யாணமுருங்கை, நாகமல்லி, வெள்ளைதூது வளை, கஸ்தூரி மஞ்சள் உள்பட 231 வகையான செடி களை கல்லூரி முதல்வர் (பொ) பேரா.குமார் தலை மையில், பச்சலூர் அரசு நடு நிலைப்பள்ளி தலைமை ஆசி ரியர் ஜோதிமணி, ஊர்வணி ஊராட்சி மன்ற தலைவர் ஏகாம்பாள் சந்திரமோகன், ஆகியோர் செடிகளை நட்டு துவக்கி வைத்தனர்.
முன்னாள் மாணவர் களான ராணியம்மாள் கல்வி அறக்கட்டளை நிறுவனர் பொறியாளர் சர்வம் சரவ ணன், பொறியாளர்கள் பா. விஜய், க.சரவணன் உள் ளிட்டோர் 231 வகையான மூலிகை செடிகளை நட்டு தோட்டம் அமைத்தனர். இந் நிகழ்ச்சியில் கல்லூரியின் அனைத்து துறை பேராசிரி யர்கள், அலுவலக பணியா ளர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த மூலிகை தோட் டத்தை கல்லூரி முதல்வர் குமார் தலைமையில், பச்ச லூர் பள்ளி தலைமை ஆசிரி யர் ஜோதிமணி திறந்து வைத்தார்.