districts

img

பண்ணை அடிமையாய்ப் பிறந்து மக்கள் தலைவராக உயர்ந்தவர்

       1923     ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி அன்றைய ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டம் பாங்கல் கிராமத்தில் சாத்தன் -  அமிர்தம் தந்ததற்கு மகனாக பிறந்த வர் தனுஷ்கோடி.

      அன்றைய கீழத் தஞ்சையில் பண்ணையார்களின் ஆதிக்கமும் நிலப் பிரபுக்களின் சாதிய ஒடுக்குமுறையும் மிகக் கடுமையாக இருந்த சூழ்நிலையில் கிராமப்புறங்களில் பண்ணையார்களின் அடிமைகளாக கூலித் தொழிலாளர்களை ஈவிரக்கம் இன்றி  ஒடுக்கும் மோசமான தண்டனை முறை இருந்தது.

       அவர்களின் வாழ்க்கை இன்றைக்கு நாம் கற்பனை யில் எண்ணிப் பார்க்க முடியாத நிலையில் இருந்தது. எகிப்தின் எக்ஸ்கி மோக்களின் வீட்டை விட மிக  மோசமான குடிசையில் விவசாயக் கூலி தொழிலாளர்கள்  வாழ்ந்தனர். ஆடு மாடுகளைவிட அவர்களை கேவ லமாக நடத்தப்பட்டனர். நோய் நொடிகள் வந்தா கூட கவனிக்க முடியாமல் இருந்தனர். மிகக் கொடூரமான சாணி பால், சவுக்கடி போன்ற மனித உரிமை மீறிய தண்டனை முறைகள் இருந்தன.

      இத்தகைய கொடுமைகளை கண்டு பி.எஸ். தனுஷ் கோடி கோபமுற்றார். எழுதப் படிக்க தெரியாத நிலை யில் இருந்த தனுஷ்கோடிக்கு முரட்டுக்குணமும் எதிர்க்கும் பண்பும் இயல்பாகவே இருந்தது.

     இந்நிலையில் திருத்துறைப்பூண்டி உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் அய்யாசாமி பிள்ளை தொடர்பு கிடைத்தது. அவரின் முயற்சியால் கிராமத் தில் வாலிபர் சங்கம் ஆரம்பித்து கிராமங்களில் சுத்தம்  செய்யும் பணியினை செய்தார். 1937, 1938 காலகட்டத் தில் தலித் மக்கள் வள்ளுவகுடி வாத்தியார் பெத்தபெரு மாள் என்பவரை கொண்டு தனுஷ்கோடி வசிக்கும் பாங்கல்  கிராமத்தில் ஆற்றங்கரை ஓரத்தில் ஒரு பள்ளிக்கூடம் கட்டினார்.

     1942 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ஒரு புதிய  பத்திரிகையை பார்த்தார். அதுதான் ஜனசக்தி. அது  கம்யூனிஸ்ட் கட்சி பத்திரிகை என்றும் அதில் விவசாயி கள், விவசாய குழுக்கள், பண்ணை அடிமைகள் தீண்டாமை பற்றி எழுதப்பட்டிருக்கிறது என்றும் அவருக்கு தெரிவிக்கப்பட்டது. அத்துடன் சேர்த்து இன்னொரு புதிய  தகவலையும் தெரிவித்தனர். இந்த கொடுமைகளை விரட்ட கர்நாடகாவில் இருந்து சிகப்பாக உயரமான ஐயர்  ஒருவர் வந்துள்ளார் என்றும் தெரிவித்தனர். தோழர் பி.சீனி வாச ராவ் அவர்களின் பேச்சைக் கேட்டு தனுஷ்கோடிக்கு  அளவில்லா மகிழ்ச்சி அடைந்து செங்கொடி சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.  

     அதன்பின் அவரின் செயல்பாட்டில் மாற்றமும் வீரமும்  தீவிரம் ஆகியது. அதைத் தொடர்ந்து பண்ணை அடிமை முறைக்கு எதிராகவும் தீண்டாமை கொடுமைக்கு எதிராக வும் சாணிப் பால், சாட்டை அடிக்கு எதிராகவும் தனுஷ்கோ டியின் போராட்டம் தீவிரமாகியது. கீழத் தஞ்சை விவசா யத் தொழிலாளர்களின் விவசாயிகளின் போராட்டக் களமாக மாறியது. அதன் பிறகு தான் தென்பரை இயக்கம்,  நாணலூர் கலவரம், பூந்தாழங்குடி துப்பாக்கிச் சூடு, வெண்மணி படுகொலைகள், வலிவலம் தேசிகர் பண்ணையை எதிர்த்து போராட்டம், என்.வெங்கடாசலம் படுகொலை, திருமெய்ஞானம் துப்பாக்கிச் சூடு என களப் போராட்டமும் தியாகங்களுமாக மாறியது செங்கொடி இயக்க போராட்ட வரலாறு.

     1964 ஆம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிளவு  பட்டபோது தோழர் பி.எஸ். தனிஷ்கோடி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்டு முழு வீச்சுடன் செயலாற்றினார். அவரது வாழ்வில் 9 ஆண்டு கள் 9 மாதம் சிறைவாசமும் அனுபவித்தார்.  

     ஓராண்டு காலம் தலைமறைவு வாழ்க்கையும் வாழ்ந்தார். 1958 ஆம் ஆண்டில் பாங்கல் ஊராட்சி மன்ற தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். 1967  ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் அவர் திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு மகத்தான  வெற்றி பெற்றார். 1970 ஆம் ஆண்டில் தலைஞாயிறு  ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்ட பி.எஸ்.தனுஷ்கோடி இரண்டு முறை அங்கே அப்பதவியில் இருந்தார். 22 ஆண்டுகள் பாங்கல் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து செயல்பட்டார்.

    உங்கள் வாழ்வில் எதை நீங்கள் பெருமையாக கருது கிறீர்கள் என்று தோழர் பி.எஸ்.டி.யை கேட்ட பொழுது எழுதப் படிக்கத் தெரியாத பண்ணை அடிமையாக இருந்த  என்னை வர்க்க உணர்வு பெற்ற மனிதனாக்கி மக்கள் ஊழியனாக மாற்றம் செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் உறுப்பினராக இருப்பதையே நான் பெருமையாக கருதுகிறேன் என்றார்.

     ஒரு பண்ணை அடிமையாய்ப் பிறந்து செங்கொடி இயக்கத்தில் இணைந்து மாபெரும் மக்கள் தலைவராக வாழ்ந்து மறைந்தவர் தோழர் பி.எஸ்.தனுஷ்கோடி.

     சின்னை.பாண்டியன் சிபிஐ(எம்) மாவட்டச் செயலாளர், தஞ்சாவூர்