districts

img

காட்டாற்றின் குறுக்கே புதிய பாலம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

பேராவூரணி, பிப்.9-  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில், பட்டுக் கோட்டை சாலையில் பூனை குத்தி காட்டாறு பாலத்தி னை முழுமையாக இடித்து விட்டு, புதிய பாலம் கட்டு வதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.  பேராவூரணி எம்.எல்.ஏ  என்.அசோக்குமார் தலைமை வகித்து அடிக்கல்  நாட்டினார். திமுக ஒன்றிய  செயலாளர்கள், நெடுஞ் சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளர் சந்திர சேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தப் பாலம், சுமார் ரூ.6  கோடியே 36 லட்சம் மதிப் பீட்டில், 63 மீட்டர் நீளமும், 10 மீட்டர் அகலமும் கொண்ட உயர்மட்ட பாலமாக அமைக் கப்பட உள்ளதாகவும், இந்த பாலம் அமைப்பதன் மூலம் மழைக் காலங்களில் பட்டுக்கோட்டை செல்லும் சாலை துண்டிக்கப்படும் பிரச்சனைக்கு தீர்வு காணப் படும் எனவும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரி வித்தனர்.