districts

மீன் வளர்ப்பை ஊக்குவிக்க மானியம் விண்ணப்பங்கள் வரவேற்பு

தஞ்சாவூர், டிச.1 - உள்நாட்டு மீன் உற்பத்தியில், தஞ்சாவூர் மாவட்டம் மாநிலத்திலேயே முதன்மையான இடத்தினை வகிக்கிறது. உள்நாட்டு மீன் உற்பத்தியை மேலும் அதிகரித்திடவும், மீன்  வளர்ப்போரை ஊக்குவித்திடும் விதமாகவும் அரசினால் கீழ்க்காணும் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இதன்படி, தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம்  2021-22 -இன் கீழ் விரால் மீன் வளர்ப்பினை ஊக்குவித்திட  இடுபொருள் மானியம் வழங்குதல் திட்டம் செயல்படுத்தப்பட  உள்ளது. விரால் மீன் வளர்ப்பில் ஆர்வமுள்ள பயனா ளிகளால் ஏற்கனவே 1,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப் பட்டுள்ள பண்ணைக் குட்டைகளை புனரமைத்திடவும் மற்றும் விரால் மீன்வளர்ப்பு செய்திட ஆகும் உள்ளீட்டு செலவி னம் என மொத்தம் ரூ.75,000-இல் 40 விழுக்காடு மானியமாக  ரூ.30,000 வழங்கப்படும்.

மேலும், தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ்  ஏற்கனவே 1000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள பண்ணைக் குட்டைகளை புனரமைக்கும் திட்டம் மற்றும் கூட்டு  மீன் வளர்ப்பில் இந்திய பெருங்கெண்டை மீன்களுடன் நன்னீர்  இறால் வளர்ப்பு மேற்கொண்டு, அதற்கு ஆகும் உள்ளீட்டு செலவினம் என மொத்தம் ரூ.62,500-இல் 40 விழுக்காட்டில் ரூ.25,000 மானியமாக வழங்கிட அரசு ஆணையிட்டுள்ளது. இதேபோன்று, புதிய மீன்குளம் வெட்டவும் மற்றும் புதிய  மீன்குஞ்சு உற்பத்தி குளம் வெட்டவும் 40 விழுக்காடு மானியம்  அளித்திடும் திட்டம் குறித்து ஏற்கனவே அறிவிப்பு வெளி யிடப்பட்டு, தகுதியான விண்ணப்பங்கள் பெறப்படவில்லை.

இதனால் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை நிறைவு செய்திட ஏதுவாக மீன்வளர்ப்பு மற்றும்  மீன்குஞ்சு வளர்ப்பு புதிய குளங்கள் அமைக்க விருப்பமுள்ள வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேற்படி நான்கு திட்டத்தில் மானிய தொகை பின்னேற்பு  மானியமாக வழங்கப்படும் எனவும், முதலில் வரும் விண்ணப் பத்திற்கு முன்னுரிமை அளித்து மூப்புநிலை அடிப்படையில் மானியம் பெறுவதற்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரி விக்கப்படுகிறது. எனவே, மேற்படி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும்  பயனாளிகள் எண்:873/4, அறிஞர் அண்ணா சாலை, கீழ வாசல், தஞ்சாவூர் என்ற முகவரியில் இயங்கும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து  உரிய ஆவணங்களுடன், டிசம்பர் 10-க்குள் விண்ணப்பிக்கு மாறு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரி வித்துள்ளார்.

;